iQOO தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான iQOO U1x என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன், இது ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்துள்ளது.
iQOO U1x விலை விவரங்கள்
IQOO U1x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 899 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .9,950 ஆகும், இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 11,000 என்ற விலையிலும் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 13,300 விலையில் சீக்ரெட் பிளாக், மார்னிங் ஃப்ரோஸ்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
iQOO U1x விவரக்குறிப்புகள்
- 6.51' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- UI 1.0 இணக்கத்துடன் கூடிய Android 10 இயங்குதளம்
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 4G VoLTE
- Wi-Fi 6 802.11 ac (2.4GHz + 5GHz)
- புளூடூத் 5.0
- GPS / GLONASS
- மைக்ரோ USB
- 18W டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜர்
- 5,000mAh பேட்டரி
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக