
எல்ஜி உலகின் முதல் ரோல் செய்யக்கூடிய ஓஎல்இடி டிவியை பிரமாண்டமான விலை டேக் உடன் அறிமுகம் செய்துள்ளது. LG நிறுவனம் 2018ம் ஆண்டில் இந்த ரோலபில் (rollable) ஸ்மார்ட் டிவியை உலகிற்கு காட்சிப்படுத்தியது. எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி ஆர் (LG Signature OLED R) என்று அழைக்கப்படும் இந்த மாடல் டிவி 2019ம் ஆண்டில் வெளியாக இருந்தது, ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின் இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
LG 65' இன்ச் ரோலபில் டிவி
இது இப்போது தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வாங்குவதற்கு கிடைக்கிறது, மேலும் 65' இன்ச் அளவில் OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. LG நிறுவனத்தின் அறிவிப்புப்படி, 10 வினாடிகளில் ரோல் செய்யக்கூடிய டிஸ்பிளே அதன் அலுமினிய தளத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோலபில் டிவி 3 மோடுகளில் செயல்படுகிறது.
ஜீரோ வியூ மோடு
ஜீரோ வியூ மோடு ஆனது, காட்சியை அலுமினிய ஃபிரேமிற்குள் மறைத்து வைத்திருக்கிறது, லைன் வியூ காட்சி மோடு டிஸ்பிளேவின் மேல் பகுதியைக் மட்டும் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்துகிறது. இது முழு டிஸ்பிளேயையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்கும். இதில் முழு டிஸ்பிளேவும் பயன்படுத்தாமல் ஒரு நேரத்தில் சில தகவல்களின் ஒரு பகுதியை மட்டுமே இது உங்களுக்குக் காண்பிக்கும்.
லைன் வியூவில் மோடு
லைன் வியூவில் மோடு, ஃபிரேம், ஹோம் டாஷ்போர்டு, கிளாக் மற்றும் மியூசிக் என 5 மோடுகள் உள்ளது. ஆப்பிள் ஹோம்கிட் சாதனங்களை எல்ஜி ஓஎல்இடி டிவி ஆதரிக்கிறது, அமேசான் அலெக்சா மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் உடனும் இதை கட்டுப்படுத்தலாம். ரோலபில் டி.வி 100W சக்தி கொண்ட 4.2 சேனல் ஸ்பீக்கர்களைக் கொண்ட சவுண்ட் அமைப்பையும் கொண்டுள்ளது. இதை புளூடூத் ஸ்பீக்கராகவும் பயன்படுத்தலாம்.
நினைத்து பார்த்திடாத விலை
இந்த எல்ஜி டிவியுடன், உங்களுக்கு 3 வருட நீட்டிக்கப்பட்ட சேவை வசதியையும், எல்ஜியின் பாதுகாப்பான இன்ஸ்டாலேஷன் குழு மற்றும் டிவி நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த ஆண்டு முழுவதும் 2 தொழில்நுட்ப வல்லுநர்களை நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பின்படி இந்த டிவி தோராயமாக ரூ. 63,84,000 நெருங்குகிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக