Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 அக்டோபர், 2020

Mi 10T, Mi 10T Pro : அக்.15-இல் இந்திய அறிமுகம்; வெறியேத்தும் விலை!

சியோமி நிறுவனத்தின் சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான Mi 10T, Mi 10T Pro மாடல்களின் இந்திய அறிமுகம் உறுதியானது... எப்போது... என்ன விலை... என்னென்ன அம்சங்கள்... இதோ முழு விவரங்கள்...

 

சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களான மி 10 டி மற்றும் மி 10 டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள், வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஆன மனு குமார் ஜெயின், கடந்த வாரம் உலகளாவிய அறிமுகத்தை சந்தித்த உடனேயே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான ஹோல் பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்தை வழங்குகின்றன. இருப்பினும் இந்த தொடரின் கீழ் வெளியான மி 10 டி லைட் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்து எந்த வார்த்தையும் இல்லை. இருந்தாலும் அதன் இந்திய வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் அது ப்ளூடூத் எஸ்.ஐ.ஜி பட்டியலில் காணப்பட்டுள்ளது.

மி 10 டி லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

- டூயல் சிம் (நானோ) ஆதரவு

- ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 12

- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம்

- 1,080x2,400 பிக்சல் தீர்மானம்

- கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

- 6.67 இன்ச் டிஸ்ப்ளே

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC

- 6 ஜிபி ரேம்

- 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர்

- 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா

- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்

- ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்

- 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 5 ஜி, 4 ஜி எல்டிஇ ஆதரவு

- வைஃபை

- ப்ளூடூத்

- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

- என்எப்சி

- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

- இசட்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டர்

- 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

- 4,820 எம்ஏஎச் பேட்டரி

- வெப்ப மேலாண்மைக்கான லிக்விட்கூல் தொழில்நுட்பம்.

மி 10 டி ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:



- டூயல் சிம் (நானோ) ஆதரவு

- ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 12

- 6.67 இன்ச் புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

- 20: 9 என்கிற திரை விகிதம்

- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

- கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு

- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

- 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) ஆதரவு

- 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (அல்ட்ரா வைட் ஆங்கிள்)

- மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார்

- முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 128GB மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்

- 5 ஜி, 4 ஜி எல்டிஇ

- வைஃபை 6

- ப்ளூடூத் வி 5.1

- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

- என்எப்சி

- இன்ப்ராரெட் (ஐஆர்)

- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

- டூயல் ஸ்பீக்கர்கள்

- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

- 5,000mAh பேட்டரி

- 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

- 65.1x76.4x9.33 மிமீ அளவு

- 218 கிராம் எடை.

மி 10 டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:



- டூயல் சிம் (நானோ) ஆதரவு

- ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஐ அடிப்படையாகக் கொண்ட எம்ஐயுஐ 12

- 6.67 இன்ச் புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே

- 20: 9 என்கிற திரை விகிதம்

- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

- கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு

- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

- 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம்

- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

- 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

- 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (அல்ட்ரா வைட் ஆங்கிள்)

- மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார்

- முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 128 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்

- 5 ஜி, 4 ஜி எல்டிஇ

- வைஃபை 6

- ப்ளூடூத் வி 5.1

- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

- என்எப்சி

- இன்ப்ராரெட் (ஐஆர்)

- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

- 5,000mAh பேட்டரி

- 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

- 165.1x76.4x9.33 மிமீ அளவு

- 216 கிராம் எடை.

மி 10 டி, மி 10 டி ப்ரோவின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை நிர்ணயம்:

இந்தியாவில் Mi 10T மற்றும் Mi 10T Pro எப்போது அறிமுகமாகும் என்பதை அறிவிக்க மனு குமார் ஜெயின் ட்விட்டருக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கே, அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியாவில் Mi 10T மற்றும் Mi 10T Pro அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தினார். இந்நிகழ்வு, குறிப்பிட்ட நாளின் மதியம் 12 மணிக்கு (நண்பகல்) தொடங்கும். உலகளாவிய அறிமுகத்தின் போது இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே (இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.43,000 க்கும், ரூ.51,700 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும், இதே அளவிலான விலை வரம்பை நாம் எதிர்பார்க்கலாம். மனு குமார் ஜெயின் தனது ட்வீட்டில் மி 10 டி லைட் மாடலை பற்றி குறிப்பிடவில்லை. இருப்பினும் இது Mi 10T மற்றும் Mi 10T Pro அறிமுகமாகும் அதே நாளில் அறிமுகமாகலாம் அல்லது பிற்காலத்தில் வந்து சேரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக