ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதற்காகக் கூகிள் நிறுவனம் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 34 பயன்பாடுகளை நீக்கம் செய்துள்ளது. ஜோக்கர் மால்வேர் என்பது ஒரு மோசமான தீம்பொருள் ஆகும். இது கடந்த சில மாதங்களாக பிளே ஸ்டோர் முழுவதும் பயன்பாடுகளை பாதித்து வருகிறது. இந்த 34 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் கூட உடனே அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்.
ஜோக்கர் மால்வேர் என்பது என்ன?
இந்த பயன்பாடுகள் பாதிக்கப்படுவதைப் பற்றி நிறுவனம் அறிந்த தருணத்திலேயே கூகிள் இந்த பயன்பாடுகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. ஜோக்கர் மால்வேர் என்பது புதிய தீம்பொருள் அல்ல, ஆனால் இது சமீபகாலத்தில் மிகவும் அதிகமாகப் பரவி வருகிறது. உண்மையில் ஜோக்கர் தீம்பொருள் என்பது ஒருவகையான தீங்கிழைக்கும் போட்(Bot) ஆகும்.
இதனால் என்ன தீங்கு நிகழும்?
இது பிளீஸ்வேர் (fleeceware) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தீம்பொருளின் முக்கிய பணி, பயனர்களுக்கு தெரியாமல் தேவையற்ற பிரீமியம் கட்டண சேவைகளுக்கு குழுசேர கிளிக்குகளை உருவகப்படுத்துவதும், எஸ்எம்எஸ் இடைமறிப்பதும் ஆகும். ஜோக்கர் முடிந்தவரைச் சிறிய குறியீட்டைப் பயன்படுத்துகிறது, மேலும் இது இருப்பதற்கான தடயத்தை கண்டறியவிடாமல் இந்த மால்வேர் தந்திரமாக செயல்படுகிறது.
முதலில் 11.. பிறகு 6.. இப்போ இன்னும் 17 ஆப்ஸ் பாதிப்பு..
ஜூலை மாதம் பிளே ஸ்டோரில் ஜோக்கர் மால்வேர் முதன்முதலில் 11 பயன்பாடுகளைப் பாதித்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் பாதியில் மேலும் 6 பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, மேலும் 17 பயன்பாடுகள் ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு, ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
120,000 பயனர்கள் பதிவிறக்கம்
இந்த 17 புதிய பயன்பாடுகளுக்கான எச்சரிக்கை தகவல் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான Zscaler இலிருந்து வந்தது. Zscaler 17 பயன்பாடுகளை கண்காணித்து, அவை ஜோக்கரில் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்து கூகிள் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது. இந்த 17 பயன்பாடுகளை மொத்தமாக சுமார் 120,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதையும் Zscaler கூறியுள்ளது.
உடனடியாக டெலீட் செய்யுங்கள்
ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட 34 பயன்பாடுகள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டதால், அவை பதிவிறக்கத்திற்கு இனி கிடைக்காது. ஆனால், இதற்கு முன்னாள் பதிவிறக்கம் செய்தவர்களின் போன்களில் இவை இன்னும் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகையால், இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால் கூட, அதை உடனடியாக டெலீட் செய்யவும்.
ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட 34 ஆப்ஸ் பட்டியல்
- All Good PDF Scanner
- Mint Leaf Message-Your Private Message
- Unique Keyboard - Fancy Fonts & Free Emoticons
- Tangram App Lock
- Direct Messenger
- Private SMS
- One Sentence Translator - Multifunctional Translator
- Style Photo Collage
- Meticulous Scanner
- Desire Translate
- Talent Photo Editor - Blur focus
- Care Message
- Part Message
- Paper Doc Scanner
- Blue Scanner
- Hummingbird PDF Converter - Photo to PDF
- All Good PDF Scanner
- com.imagecompress.android
- com.relax.relaxation.androidsms
- com.file.recovefiles
- com.training.memorygame
- Push Message- Texting & SMS
- Fingertip GameBox
- com.contact.withme.texts
- com.cheery.message.sendsms (two different instances)
- com.LPlocker.lockapps
- Safety AppLock
- Emoji Wallpaper
- com.hmvoice.friendsms
- com.peason.lovinglovemessage
- com.remindme.alram
- Convenient Scanner 2
- Separate Doc Scanner
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக