பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி, ஒலாவின் லண்டன் இயக்க உரிமத்தினை பறித்துள்ளது, லண்டனின் பொது போக்குவரத்து ஆணையம்.
இந்தியாவின் முன்னணி ஆஃப் அடிப்படையிலான வாகன நிறுவனமாக ஓலா, இந்தியா, ஆஸ்திரேலியா, லண்டன், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது சேவையினை வழங்கி வருகின்றது.குறிப்பாக லண்டனில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கியது.
ஆரம்பம் முதலே எதிர்ப்பு தான்
ஆனால் ஓலா நிறுவனம் அங்கு சென்றது முதல் கொண்டே பலமான எதிர்ப்புகள் இருந்து வந்தன. லண்டனின் உபெர், ஃப்ரீனவ் மற்றும் போல்ட், இவர்கள் தவிர பிளாக் கேப் எனப்படும் பாரம்பரிய ஓட்டுனர்கள் என பலரும், ஓலாவினை எதிர்த்தனர். இதற்கிடையில் இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக லண்டனின் பொதுபோக்குவரத்து ஆணையம், தனது அறிக்கையில் ஓலா நிறுவனத்தின் பொதுப்போக்குவரத்தில் பல தோல்விகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
அந்த நிறுவன செயலி சட்ட திட்டங்களுக்கு பொருந்தாத நிலையில் உள்ளது. அதோடு பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உரிம விதிகளை மீறுவது உட்பட ஓலா பிரச்சனைகளை கண்டுபிடித்தாகவும் லண்டன் போக்குவரத்து ஆணையம், தெரிவித்துள்ளது. எனினும் லண்டனின் பொதுபோக்குவரத்து ஆணையத்தின் இந்த முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, ஓலாவுக்கு 21 நாள் அவகாசமும் கொடுத்துள்ளது.
நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்
இதே இது குறித்து ஓலா தரப்பில், இந்த மறுஆய்வு காலத்தில் லண்டனின் பொதுபோக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாகவும், எழுப்பப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உத்தரவாதங்களை வழங்கவும், அவற்றை திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் சரி செய்யவும் முயல்கிறோம். அதோடு லண்டனின் பொதுபோக்குவரத்து ஆணையத்தின் இந்த முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளது.
உபெர் ரீஸ்டோர்
லண்டனின் இந்த அதிரடி முடிவானது, உபெர் நிறுவனம் இந்த தோல்விகளை எல்லாம் மீறி, சரியான ஆபரேட்டர் தான் என தீர்ப்புக்கு பின்னர் வந்துள்ளது. அதுவும் உபெர் வென்ற சில நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு நடவடிக்கையானது ஓலாவின் மீது பாய்ந்துள்ளது. நிச்சயம் இதனையும் சமாளித்து ஓலா வெளி வரணும். ஒரு இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் தனது சேவையை விரிவுபடுத்துவது நல்ல விஷயம் தானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக