ரியல்மி தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரியால்மி 7ஐ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. என்ன விலை... எப்போது முதல் விற்பனை... என்னென்ன அம்சங்கள்... இதோ முழு விவரங்கள்...
ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஆகியவற்றை உள்ளடக்கிய ரியல்மி
7 தொடரின் கீழ் புதிய மாடலாக ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பு, உயர் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம்
கொண்ட டிஸ்பிளே மற்றும் ஆக்டா கோர் ப்ராசஸர் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
இது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவு மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ்
அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 7 மாடலின் டோன்டு டவுன் பதிப்பாகும்.
இது முதலில் இந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ரியல்மி
7i ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் AIoT தயாரிப்புகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, ரேம் மற்றும் ப்ராசஸர்:
டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ கொண்டு இயங்குகிறது.
இது 6.5 இன்ச் அளவிலான எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் என்கிற திரை வீகிதம்,90 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் ஆகியவற்றுடன் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC மூலம் இயக்கப்படுகிறது.
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள்:
கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மி 7i ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.8 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் (எஃப் / 2.4 லென்ஸ்) மோனோக்ரோம் சென்சார்சி+ எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன.
முன்புறத்தை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை எஃப் / 2.1 லென்ஸுடன், டிஸ்பிளேவில் உள்ள ஹோல் பஞ்ச் கட் அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ், கனெக்டிவிடிகள், பேட்டரி:
ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி வரை இன்டர்னல் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய ஆதரவினையும் வழங்குகிறது.
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, ஆக்சலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகள் உள்ளன.
இதில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. ரியல்மி 7i ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
இந்தியாவில் ரியல்மி 7i ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி:
ரியல்மி 7i ஸ்மார்ட்போனின் பேஸிக் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.11,999 க்கும், அதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.12,999 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் விற்கப்படுகிறது. ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆனது அக்டோபர் 16 முதல் விற்பனைக்கு வரும், இது பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக