உசிலம்பட்டி பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வந்த 10 நிறுவனங்களுக்கு, உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள்
குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி
நீரை எடுத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
அதனடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி மற்றும் அதன்
சுற்றுவட்டாரப் பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், சீமானுத்து, போத்தம்பட்டி, கணவாய்
பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக
அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அரசு அனுமதியின்றி விதிகளை மீறி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர்
எடுத்து டிராக்டர்கள் மூலமாகத் தனியார் நிதி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த
10 நிறுவனங்களை நேரில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வில் அந்த 10 நிறுவனங்கள், அனுமதியின்றி முறைகேடாகத் தண்ணீரை உரிஞ்சி வந்தது
தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் கோட்டாட்சியர் அந்த
நிறுவனங்களுக்குச் சீல் வைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக