2022ஆம் ஆண்டிற்காக புதிய எஸ்யூவி, எம்பிவி மற்றும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் முயற்சியாக வருங்காலத்தில் புதிய
தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி
வருகிறது. ஒமேகா அல்லது ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள இந்த புதிய
டாடா கார்களை பற்றி பெரிய அளவில் எந்த விபரமும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய தயாரிப்புகளின் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் டரியோ, எபிக் மற்றும் ஸ்பைக் என்ற மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் இந்த பெயர்கள் தான் புதிய டாடா தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
இந்த பெயர்களில் புதிய செடான், எம்பிவி மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு போட்டியாக மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம். எரிபொருள் கார்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் கார்களும் இந்த பெயர்களில் இடம்பெறக்கூடும்.
இதில் புதிய எம்பிவி கார் ஆல்பா ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். இதன் பெயர் தான் டரியோ போல் தெரிகிறது. டாடா நெக்ஸானின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை தேர்வுகளாக பெற்றுவரலாம் என கூறப்படும் இந்த எம்பிவி கார் நிச்சயம் மாருதி எர்டிகாவிற்கு எதிரான டாடாவின் ஆயுதமாக விளங்கும் என்பது உறுதி.
இதற்கிடையில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினின் வடிவமைப்பிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் இந்த புதிய பெட்ரோல் என்ஜின் புதிய செடான் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு உண்டானதாக இருக்கலாம். இவையும் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தை தான் அடிப்படையாக கொண்டவைகளாக இருக்கும்.
டாடா எலக்ட்ரிக் கார்களை பொறுத்தவரையில், இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. ஆனால் இந்த நிலையை பட்ஜெட் எக்ஸ்ஷோரூம் விலைகளை கொண்ட எலக்ட்ரிக் தயாரிப்புகளின் மூலம் மாற்ற முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.
ஏனெனில் இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் புதிய அறிமுகங்களின் ஆரம்ப விலைகள் இதனை காட்டிலும் இன்னும் குறைவாக ரூ.8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறான புதிய தயாரிப்புகளுக்கு மத்தியில் தற்சமயம் விற்பனையில் உள்ள நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் புதிய தலைமுறைகளின் தயாரிப்பு பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக ஹெரியரின் 7-இருக்கை வெர்சனான கிராவிட்டாஸ் அடுத்த 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக