பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தரமான பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக மற்ற டெலிகாம் நிறுவவனங்களை விட தனித்துவமான திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். மற்ற நிறுவனங்களை விட சற்று குறைவான விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
அதன்படி ரூ.499 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்திற்கு போட்டியாக ரூ.599 என்கிற புதிய ஃபைபர் பேசிக் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்ன்எல் நிறுவனம். மேலும் இந்த புதிய திட்டம் 60 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது.
அதன்பின்பு வரம்பற்ற டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக
அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தின் சிறப்பு
என்னவென்றால், எங்கெல்லாம் நிறுவனத்தின் ஃபைபர்-டு-ஹோம (எஃப்.டி.டி.எச்) சேவை அணுக
கிடைக்கிறதோ, அங்கெல்லாம் இந்த புதிய திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். ஆனாலும்
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் இந்த பிராட்பேண்ட் திட்டம் கிடைக்காது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.599 திட்டத்தை அறிமுகம் செய்த கையோடு, அதன் ரூ.449
திட்டத்தை அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும்படி செய்துள்ளது. இந்த புதிய திட்டம்
இப்போது அனைத்து இடங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ஆல்-நியூ ஃபைபர் பேசிக் பிளஸ் பிராட்பேண்ட்
திட்டம் ஆனது 60 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3300 ஜிபி வரை வழங்குகிறது. ஆனாலும்
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை போட்டியாளரான ஏர்டெல்-ஐ போலவே வரம்பற்ற
டேட்டா திட்டம் என்கிற பெயரின் கீழ் விற்பனை செய்கிறது.
மேலும் பயனர்கள் மாதந்திர FUP டேட்டா வரம்பை தீர்த்தப் பிறகு, இணைய வேகம் 2
எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஆனால் FUP டேட்டா வரம்பை மீறிய பிறகு 2 எம்பிபிஎஸ்
வேகத்தில் எவ்வளவு பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பதிவேற்றலாம் என்பதற்கு எந்த
வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டேட்டா நன்மைகளை தவிர்த்து, இந்த பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள் இந்தியவுக்குள் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 24 மணி நேரமும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளைப் பெறுவார்கள். ஆனால் இந்த திட்டத்தின் மாதாந்திர விலை ரூ.599 ஆகும். பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை நீண்ட கால தொகுப்புகளின் கீழ் தொடங்கவில்லை, எனவே நீங்கள் இதை நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.599 திட்டத்தில் ஒடிடி சந்தாக்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்பதில் தெளிவு இல்லை.. முன்பு குறிப்பிட்டபடி பிஎஸ்என்எல் ரூ.499 ஃபைபர் பேசிக் திட்டம் மீதும் சிறிய திருத்தத்தை நிகழ்த்தி உள்ளது. அதன்படி இந்த ரூ.499 திட்டம் இப்போது அந்தமான மற்றம் நிக்கோபார் தவிர அனைத்து நகரங்களிலும் அணுக கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.499 ஃபைபர் பேசிக் திட்டம் நன்மைகள் பொறுத்தவரை, 3.3டிபி வரையிலான டேட்டாவை 30எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் துழைகுiடிநச இன் ரூ.399 திட்டத்துடன் நேரடியாக போட்டி போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக