இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட நத்திங் (Nothing) என்ற தொழில்நுட்ப நிறுவனம், அதன் முதல் தயாரிப்பு சாதனம் விற்பனைக்குக் கிடைப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் ( Nothing ear 1 wireless earbuds) மற்றும் சில ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை உங்களுக்காகச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை எங்களுக்குத் தெரிந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.
இந்த இயர்பட்ஸ்கள் ஒரு வெளிப்படையான வடிவமைப்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் வெறும் கண்களால் பார்க்கும் போது ''இருக்கு ஆனால் இல்லை'' என்ற மனநிலை உருவாகும் படி அதன் வடிவமைப்பு அமைந்துள்ளது. குறைந்தபட்சம் ஒவ்வொரு இயர்பட்ஸ் இன் சில பகுதிகள் மட்டும் சாதாரண பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இவை செயலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) இருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. இவை சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் போன்ற சாதனங்களுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் விலைக் குறியீட்டை இந்தியா உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்திய விலை மதிப்பின்படி இதன் விலை ரூ .5,999 என்ற விலையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு பிளிப்கார்ட் பிரத்தியேகமாக இருக்கும் இந்த சாதனம் 27 ஆம் தேதி லைவ் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் உலகளவில் விற்பனைக்கு வரும்போது இந்தியாவிலும் கிடைக்கும்.
பிளிப்கார்ட் தற்பொழுது நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அதன்பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது கிடைக்கும் படி ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் வைத்துள்ளது. இது "coming soon" என்ற டேக் உடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி நாம் இது எப்போது கிடைக்குமென்ற அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக நாம் காத்திருக்க வேண்டும். இந்த வயர்லெஸ் இயர்பட்களுக்கான முன்பதிவுகள் மற்றும் இறுதி விற்பனை தொடங்குகின்றன.
Flipkart ஏற்கனவே நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை வட்டி இல்லா இஎம்ஐ மற்றும் ஆரம்பக் கட்டத்திலேயே கிடைக்க வேகமாக விநியோக விருப்பங்கள் ஷாப்பிங் வலைத்தளத்தில் முன்பதிவுகள் மற்றும் விற்பனை நேரலையில் காட்டப்படும் என்று உறுதி அளித்துள்ளது. ஷாப்பிங் இணையதளத்தில் நத்திங் இயர் (1) வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆர்டரை நீங்கள் பதிவிற்கு வைக்கும் போது இதைத் தேர்வுசெய்ய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக