ஏர்டெல் நிறுவனம் கார்களுக்கான இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், பாரதி ஆக்ஸா நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கார்களுக்கான விரிவான காப்பீட்டு திட்டத்தை வழங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம், பேமெண்ட்ஸ் எனும் மொபைல் வங்கி சேவையை செயல்படுத்தி வருகின்றது. இதுவே, தற்போது பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இணைவின்கீழ் பன்முக காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
விபத்தினால் ஏற்படும் இழப்பு, திருட்டு மற்றும் இயற்கை அல்லது மனிதர்களினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றிற்கு உரிய நிவாரணத்தை புதிய காப்பீட்டு திட்டம் வழங்கும். இத்துடன், விபத்தினால் ஏற்படும் காயம் அல்லது பிற இழப்புகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்க இருப்பதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
விபத்து காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதனை ஏர்டெல் மற்றும் பாரதி ஆக்ஸா வழங்க இருக்கின்றது. இதுதவிர, விபத்தை சந்திக்கும் மூன்றாம் நபருக்கான இழப்பீட்டையும் இதன் மூலம் வழங்க இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. எனவே, பாலிசிதாரர்கள் இதன்மூலம் பல்வேறு நலன்களைப் பெற முடியும் என தெரிகின்றது.
ஏர்டெல் செல்போன் செயலியில் இதற்கான ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. எளிய நுகர்வை வழங்கும் வகையில் செயலியில் இதற்கான ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு ஏர்டெல் ஸ்டோர் அல்லது இணையதளத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது. எந்தவொரு முன்னாய்வும் இன்றி இந்த காப்பீட்டை வழங்க இருக்கின்றது ஏர்டெல்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 'ஏர்டெல் நன்றி' பயன்பாட்டின் மூலம் காகிதமில்லா, பாதுகாப்பான மற்றும் விரைவான செயல்முறையைப் பயன்படுத்தி ஐந்து நிமிடங்களுக்குள் காப்பீட்டுக் கொள்கையை பெற்றுக் கொள்ள முடியும்.
எந்த முன் பரிசோதனையும் இல்லாமல், ஒரு வாடிக்கையாளர் வாகனம் குறித்த விவரங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். மேலும், காப்பீடு உடனடியாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்" என கூறியுள்ளது. ஆகையால், இந்த காப்பீட்டு திட்டம் சுலபமாக இருக்கும் என கருதப்படுகின்றது.
தற்போது பிரத்யேகமாக கார்களுக்கு மட்டுமே இத்திட்டம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனங்களுக்கான காப்பீடு பற்றிய தகவல் தெரியவரவில்லை. புதுப்பித்தலின் போது, வாடிக்கையாளர்கள் கூடுதலான ஆட்-ஆன் சேவைகளைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
ஆட்-ஆன் பேக்கேஜில், கார் சாவியை இழப்பது அல்லது மாற்றுவது, கார் பிரேக்டவுண் ஏற்பட்டால் சாலையோர உதவி, இயந்திரம் அல்லது கியர்பாக்ஸின் சேதம், பாலிசிதாரருக்கு காயம் ஏற்பட்டால் மருத்துவ செலவுகள், மருத்துவமனையை அடைய ஆம்புலன்ஸ் செலவு மற்றும் பல தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக