Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 நவம்பர், 2020

வெற்றி.. Wet Tree.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------------------

சிரிங்க சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...!!

---------------------------------------------------------------

மருமகள் : அத்தை, தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...

அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்மா?

மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும்... தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?

அத்தை : 😩😩

---------------------------------------------------------------

அம்மா : உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...

மகன் : ஏன்? என்ன செஞ்சா?

அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வெச்சி ரசகுல்லா பண்ணுங்க-ன்னு சொல்றா...

மகன் : 😛😛

---------------------------------------------------------------

மகன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரத்துல நெருப்பு வெச்சா எரியல...

அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முறுக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீபாவளி-யே இல்லடா....

அம்மா : 😠��

---------------------------------------------------------------

மனைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடுச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகல?

கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு, லட்டு-னு தீபாவளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..

மனைவி : 😝😝

---------------------------------------------------------------

கணவன் : என்னடி ஆச்சு? உன்னை சுத்தி இவ்வளவு பேர் நிக்குறாங்க...

மனைவி : நான் செஞ்ச அல்வாவ சாப்பிட்ட மாமியார், வாயே திறக்க முடியலைன்னு சொன்னேன், அதான்... அவங்களுக்கும் செஞ்சுதர சொல்லி நிக்குறாங்க...

கணவன் : 😖😖

---------------------------------------------------------------

டாக்டர் : உங்க கால் எலும்பு எப்படி முறிஞ்சுது?

நோயாளி : தீபாவளிக்கு என் மனைவி பண்ண மைசூர்பாகை தெரியாமல் கால்ல போட்டுக்கிட்டேன் டாக்டர்...

டாக்டர் : 😆😆

---------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

---------------------------------------------------------------

பட்டாசு திரியில பத்த வெச்சா பட்டாசு வெடிக்கும்... 

அதுவே பிளாஸ்'திரி"யில பத்த வெச்சா வெடிக்குமா?😎😎

ஓவரா பேசுற வாயும்... நைட்ல கத்துற நாயும்... அடி வாங்காம இருந்ததா சரித்திரமே இல்ல.😝😝

லைப்ல வெற்றி-னா என்ன-னு தெரியுமா? அடை மழை பெய்யும்போது உங்க வீட்டு மரம் ஈரமா இருக்குமே... அது தான் Wet Tree..!😇😇

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக