இறைவர் திருப்பெயர் : மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர்,
சமீவனேஸ்வரர்),
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை,
தல மரம் :வன்னி்,
தீர்த்தம் : அன்னமாம்பொய்கை,
சிலம்பாறு்,
வழிபட்டோர் : பிரமன், லட்சுமி,
உமாதேவி ,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், சுந்தரர்,
தல வரலாறு:
சுந்தரர் பொன் பெற்றத் தலம்.
கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த 'முயலகன்' நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி.
இதனால் நடராசர் திருவடியில், முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. நடராசர் சர்ப்ப
நடன மூர்த்தியாக காட்சித் தருகிறார்.
கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார்.
சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும்,
தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.
சிவதல யாத்திரை சென்ற சுந்தரர்
தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு
உணவு படைப்பது வழக்கம். ஒருசமயம் அவர் திருவானைக்கா தலத்தில் சிவனை
தரிசித்துவிட்டு இத்தலம் வந்தார். சிவனையே நண்பராகப் பெற்றிருந்த அவர் இங்கு அவரிடம்
பொன் வேண்டி பதிகம் பாடினார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக
இருந்தார். பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன்
என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும்
பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன் முடிப்பை
பரிசாகத் தந்தார். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே
அவர் பொன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு
வந்தனர்.
அவர்கள் இருவரும் சுந்தரரிடம், பொன்னை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தை கேட்டனர்.
அவர் "பொன் சுத்தமானதுதானா!,' என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அவர்களில் ஒருவர் சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி, அதனை உரைத்துக் காட்டி
தரமானதுதான் என்று உறுதி கூறினார். உடனிருந்தவரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் இருவரும் மறைந்து விட்டனர். வியந்த சுந்தரர் சிவனை மறுபடியும் தான்
இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். அவருக்கு காட்சி தந்த
சிவன், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்ணு எனவும்
உணர்த்தினார். "மாற்றுரைவரதர்' என்ற பெயரும் பெற்றார்.
இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது.
இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இராஜகோபுரத்தின்
கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில்
சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை
பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த
அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். இவள் இத்தலத்தில் பாலாம்பிகை
என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் இவளுக்கே முதல் பூஜை நடக்கும்.
அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை
தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். திருமணமாகாத
பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு
மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன்
தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள்
ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க
அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
போன்:
+91-431 - 6574 972, +91-94436 -
92138.
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மி.
தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள்
செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் 1/2 கி.மி. செல்ல இந்த சிவஸ்தலம் ஆலயத்தை
அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவாசி செல்ல நகரப்
பேருந்து வசதி உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல்
இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.கருவறையில்
சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார்.
சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும்,
தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.
சுந்தரர் பொன் பெற்றத் தலம்.திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும்
இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக