Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 நவம்பர், 2020

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். கண்டுபிடியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

-----------------------------------------------------

பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.

சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டுல போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?

பெரியசாமி : 😉😉

-----------------------------------------------------

ராஜா : பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேக்குறான்னு பேப்பரை நிறுத்தியது தப்பாப்போச்சு.

கஜா : ஏன்?

ராஜா : இப்ப நியூஸ் கேட்டுட்டு தரேன்னு வு.ஏ-ஐ ஓசி கேக்குறான்.

கஜா : 😅😅

-----------------------------------------------------

சில யதார்த்தங்கள் !!

-----------------------------------------------------

அனுபவமின்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

மௌனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

இளமையில் படியுங்கள்... முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

நம்பிக்கை செழிப்பை தராது... ஆனால், தாங்கி நிற்கும்.

துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

-----------------------------------------------------

விடுகதைகள்...!!

-----------------------------------------------------

1. பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?

2. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை. அது என்ன? 

3. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை. அது என்ன? 

4. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை. அது என்ன? 

5. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். அவன் யார்?

6. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? 

விடைகள் : 

1. தேன்

2. சிலந்தி 

3. தக்காளி

4. தோடு

5. நுங்கு 

6. தொலைபேசி

-----------------------------------------------------

குறளும், பொருளும்...!!

-----------------------------------------------------

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

பொருள் : 

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேராது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக