Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 நவம்பர், 2020

பட படவென வெடிக்கும்... சரவெடி காமெடிகள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------

சரவெடி காமெடிகள்...!!

--------------------------------------------

ராஜ் : என்ன... தீபாவளி எக்ஸ்சேஞ் மேளாவா??

கடைக்காரர் : ஆமாம் சார்... 

ராஜ் : என் மனைவியை எக்ஸ்சேஞ்ச் பண்ணித்தர முடியுமா?

கடைக்காரர் : 😬😬

--------------------------------------------

பேஷண்ட் : என்ன டாக்டர்... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வானம், சரவெடி, சங்கு சக்கரம்-னு எழுதி இருக்கீங்க?

டாக்டர் : எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும்தான் விக்கிறோம்...

பேஷண்ட் : 😳😳

--------------------------------------------

ராமு : அந்த டைரக்டர் ஏன் கேஸ் சிலிண்டர்ல நெருப்பு வெக்குறாரு?

சோமு : அவரு எப்பவும் பிரம்மாண்ட வெடிகளைத்தான் வெடிப்பாராமா...

ராமு : 😳😳

--------------------------------------------

வாடிக்கையாளர் : என்னது... இது சீனா வெடியா?

--------------------------------------------

 

கடைக்காரர் : ஆமாம்... நீங்க உங்க வீட்டு வாசல்ல பத்த வெச்சா 'எல்லை தாண்டி" பக்கத்து வீட்டில போய் விழும்!

வாடிக்கையாளர் : 😛😛

--------------------------------------------

சேகர் : இப்பத்தானே ரெய்டு வந்துட்டுப் போனீங்க... மறுபடியும் எதுக்கு வந்திருக்கீங்க?

ஆபீஸர் : இது 'தீபாவளி இனாம்"க்கான ஸ்பெல் ரெய்டு சார்..!

சேகர் : 😱😱

--------------------------------------------

அருண் : சார் நீங்க ஒரு டாக்டர் தானே?...

குமார் : அட ஆமாம்... எப்படி கண்டுபிடிச்சீங்க?...

அருண் : ஊசி வெடி மட்டுமே வெடிக்குறீங்களே... அதான்...

குமார் : 😄😄

--------------------------------------------

தீபக் : இது என்ன புதுவெடியா இருக்கு?

கடைக்காரர் : இதன் பெயர் டாஸ்மாக் வெடி..

தீபக் : என்னது... டாஸ்மாக் வெடியா?

கடைக்காரர் : ஆமாம்... போதையில இருக்குறவங்க பத்த வெச்சாதான் வெடிக்கும்.

தீபக் : 😂😂

--------------------------------------------

தாத்தா : ஏன்டீம்மா அந்த நீளமா... உருளையா ஒரு காரம் பண்ணியிருந்தியே அது இன்னொன்னு இருந்தா கொடு!

பேத்தி : அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!

தாத்தா : 😐😐

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக