Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 நவம்பர், 2020

அமேசானில் ஹாலிவுட்டை ஓரம் கட்டி சரித்திரம் படைத்த சூரரை போற்று.. இதற்கு முன் இத்தனை கோடி பேர் பார்த்ததே இல்லையாம்!

 அமேசானில் ஹாலிவுட்டை ஓரம் கட்டி சரித்திரம் படைத்த சூரரை போற்று.. இதற்கு  முன் இத்தனை கோடி பேர் பார்த்ததே இல்லையாம்! - Cinemapettai

கடந்த 12ம் தேதி அமேசான் தளத்தில் சூரரைப்போற்று படம் வெளியானது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வாழ்க்கை வரலாறு படமாக உருவான சூரரைப்போற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தியேட்டரை குறி வைத்து உருவான சூரரைப்போற்று திரைப்படம் எதிர்பாராத சிக்கல்களால் நேரடியாக அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டது.

ரசிகர்கள் பெரிய அளவில் கவலை அடைந்தாலும் விரைவில் புதிய படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அமேசான் தளத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அமேசான் தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் சர்வரே திணறி விட்டதாம்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை அமேசான் தளத்தில் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள்.

தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் தளத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சூரரை போற்று படத்தின் மூலம் நல்ல லாபம் பெற்றுள்ளதாம் அமேசான்.

இதனால் அடுத்ததாக விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை வாங்க எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்கிற ரேஞ்சுக்கு வந்து விட்டார்களாம். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!