Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

ஊரடங்கில் விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களின் கதி என்ன? உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது

ஊரடங்கில் விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களின் கதி என்ன? உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது

2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வது குறித்த தனது இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி ஊரடங்கினால் விற்கப்பட முடியாமல் தேங்கி கிடந்த பிஎஸ்4 வாகனங்களை காலக்கெடுவான மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் முதல் தளர்வு கொண்டுவரப்பட்ட பின்னர் 10 நாட்களுக்கு இந்தியாவில் விற்பனை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒன்றை அறிவித்திருந்தது.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 10 சதவீதத்திற்கு மேல் வாகனங்கள் விற்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தின் கோபத்திற்கு டீலர்கள் உள்ளாக நேர்ந்தது. மேலும் அதிகமாக விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்கள் குறித்த விபரத்தையும் ஃபடா என்கிற ஆட்டோமொபைல் விநியோகஸ்தர் சங்கத்தின் கூட்டமைப்பிடம் நீதிமன்றம் கேட்டது.

இது அரசாங்க போர்ட்டலில் இருந்து பெறப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்டது. அதன்படி வாஹானில் பதிவு செய்யப்படாத 17,000 வாகனங்களை ஃபடா விற்றதாக உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டியது. மேலும், டீலர் கூட்டமைப்பு பிஎஸ் 4 வாகன விற்பனைக்கு வழங்கிய எண்ணிக்கையை அறிக்கையில் சேர்க்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தால் 1.09 லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்யலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் டீலர்கள் இந்த எண்ணிக்கையை மீறியதால் இந்த 10 நாட்களில் விற்கப்பட்ட எந்த வாகனத்தையும் பதிவு செய்ய முடியாதப்படி நீதிமன்றம் தடை விதித்தது.

அதன்பின் ஃபடா, நீதிமன்றத்தில் மனு அளிக்க இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஃபடாவின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக அடுத்த சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த இறுதி தீர்ப்பின்படி, டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் (10 நாட்கள்) விற்கப்பட்ட வாகனங்களை ஆர்.டி.ஒ அலுவலங்களை பதிவு செய்து பதிவு எண்களை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை ஃபடா தலைவர் வின்கேஷ் குலடி மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஊரடங்கில் விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களின் கதி என்ன? உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது

ஊரடங்கில் விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களின் கதி என்ன? உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது

இது தொடர்பான அவரது பதிவில், "டெல்லியில் பிஎஸ்4 வாகனங்களுக்கான உச்சநீதிமன்ற உத்தரவு இறுதியாக முடிந்துவிட்டது மற்றும் வரி செலுத்தப்பட்ட மற்றும் எண்கள் உருவாக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும், ஆர்.சி இப்போது வழங்கப்படும். இவ்வளவு நேரம் காத்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு பெரிய ஆறுதல். ஃபடா தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்காகவும் வாடிக்கையாளர்களுக்காவும் பணியாற்றுகிறது!" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்6-க்கு மாசு உமிழ்வு நிலைப்பாடு மாறுவது டீலர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இடையில் வந்த கொரோனா வைரஸ் ஊரடங்குகள் இத்தகைய சூழலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதுபோல் அமைந்தது. இவ்வாறான சூழலில் இயங்கிவரும் ஆட்டோமொபைல் துறைக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த இறுதி தீர்ப்பு சற்று நிம்மதியை தரும்

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக