Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 நவம்பர், 2020

வாங்கும் அனுபவத்தை வெற லெவலுக்கு கொண்டுபோன டிவிஎஸ்... இனி புதிய வாகனம் வாங்குவது ரொம்ப சுலபம்!



வாடிக்கையாளர்களுக்கு எளிதான வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது.

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சிறப்பான செயல் ஒன்றை செய்திருக்கின்றது. அதாவது, வாடிக்கையாளர்கள் ஷோரூமிற்கு வந்து ஒவ்வொரு இருசக்கர வாகனமாக பார்த்து, கால் வலிக்க நடந்து நேரத்தை வீணடிக்கும் செயலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.

இதற்கு பதிலாக தற்போது புதிய செல்போன் செயலி ஒன்றை அது அறிமுகம் செய்துள்ளது. அரைவ் (ARIVE - Augmented Reality Interactive Vehicle Experience) என பெயரிடப்பட்டிருக்கும் செல்போன் செயலியையே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இது, வாடிக்கையாளர்களை நேரடியாக ஷோரூமில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இதுதவிர, அந்த வாகனத்தைக் கிளிக் செய்கையில் வாகனம் பற்றிய அனைத்து முக்கியமான தகவலுக்கு நம்மை அந்த ஆப் அழைத்துச் செல்லும். இதன்மூலம் சேல்ஸ் மேன் சொல்ல தவறக்கூடிய சில முக்கிய விஷயங்களைக் கூட எளிதில் அறிந்து கொள்ள முடியும். இத்துடன், போலியான தகவல்கள் தவிர்க்கப்பட்டு, என்ன நிஜமோ அந்த தகவல்களை மட்டுமே இந்த ஆப் வழங்க இருக்கின்றது.

இதுதவிர, ஷோரூமுக்கு சென்று ஓர் வாகனத்தைப் பார்த்தால், நாம் எப்படி அதனை சுற்றி சுற்றி பார்ப்போமோ அதேபோன்று 360 டிகிரியும் பார்வையிடும் வகையில் இந்த ஆப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சுவாரஷ்யமான சிறப்பு வசதிகளும் இந்த ஆப்-பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், நிச்சயம் இந்த ஆப் பார்வையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், டெஸ்ட் டிரைவ் செய்யும் வசதியைப் பெற வேண்டுமானால் ஷோரூமுக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஒரு சில டீலர்கள் கோவிட்19 வைரஸ் பரவல் காரணமாக டெஸ்ட் டிரைவ் வசதியினை வீடு தேடி வந்து தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டெஸ்ட் டிரைவினை புக் செய்யும் வசதியும் இந்த செல்போன் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி 3டி தரத்திலான புகைப்படங்களைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் நேரில் பார்வையிடுவதைக் காட்டிலும் மிக தெளிவான அனுபவத்தை செயலி வழங்கும் வகையில் இருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனம் அண்மையில்தான் அதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்குள்ளாக, வெகு விரைவில் அதன் புதிய வாகனங்களை நுகர்வோருக்கு எளிய வாங்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரைவ் செயலியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக