Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 நவம்பர், 2020

சவால்... வேகமாக படிக்க முடியுமா? டங் டுவிஸ்டர்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

-------------------------------------------------

ரமனன் : பாப்பா, இந்த Dress தீபாவளிக்கு எடுத்ததா..?

பாப்பா : இல்ல, எனக்கு எடுத்தது...

ரமனன் : 😉😉

-------------------------------------------------

 

பாலு : படகுல ஏறி பாக்கலாமா?

வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பாக்கமுடியும்.

பாலு : 😐😐

-------------------------------------------------

கரண் : அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது.

நவீன் : ஏன்?

கரண் : எல்லோருக்கும் அவருதான் ஆப்ரேஷன் பண்ணுனாரு...

நவீன் : 😆😆

-------------------------------------------------

சிறந்த வரிகள்...!!!

-------------------------------------------------

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று...

வாழ்க்கையும் அப்படித்தான்...

முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று?

 

யாரும் இல்லை என்று வருத்தப்படாதே...

நியாயமும், நேர்மையும் உன்னிடம் இருக்கும்வரை,

உண்மையானவர்கள் வருவார்கள்...

-------------------------------------------------

போலியானவர்கள் விலகுவார்கள்...!!

-------------------------------------------------

எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாதே... உன் மேல் ஒருவர் வைத்திருக்கும் உண்மையான அன்பை தவிர.

 

கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதியான மருந்தை போலவே... சிறிதும் உன் வாழ்க்கையின் வலிக்கு அது ஆறுதல் அளிப்பது இல்லை.

-------------------------------------------------

டங் டுவிஸ்டர்...!!

-------------------------------------------------

 

கல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல ஏகும் நல்ல செல்லப் பிள்ளையே, நில்லு சொல்லு செல்லு.

 

ஏணி மேல கோணி, கோணி மேல குண்டு, குண்டு மேல புல்லு, புல்லுக்குள்ள பூச்சி, எது எனக் கேட்ட ஆச்சி விட்டது ஆயுள் மூச்சி.

 

காலம் நல்ல காலம். நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி நாளும் போடு நல்ல தாளம்.

-------------------------------------------------

இது சிரிப்பதற்கு மட்டுமே...!!

-------------------------------------------------

 

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

.

.

.

.

.

ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை... 

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டா நீங்க கொத்தடிமை....😎😎

 

ஜனவரி - 14க்கும், பிப்ரவரி - 14க்கும் என்ன வித்தியாசம்?

.

.

.

.

.

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14

அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14😛😛 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக