குரு பார்த்தால் கோடி புண்ணியம் !!
🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அத்தியாவசியமாக தேவைப்படுவதை கொடுக்கக்கூடியவர்.
🌟 அவைகள் அறிவுக்கூர்மை, தனம் மற்றும் புத்திரச் செல்வமாகும்.
🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருக்கும் குரு ஆவார். பல மொழிகளில் புலமை பெறுவதற்கும் காரணகர்த்தாவானவர் குரு.
குரு கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :
🌟 தந்தை : ஆங்கிரீஸர்
🌟 உகந்த நாள் : வியாழன்
🌟 குருவின் பிரதி அதிபதி : பிரம்மா - தட்சிணாமூர்த்தி
🌟 குருவின் மனைவி : தாராதேவி
🌟 வசிக்கும் இடம் : வேள்விகள் வளர்க்கும் இடங்கள்
🌟 ராசியை கடக்கும் காலம் : 1 வருடம்
🌟 குருவின் நட்பு கிரகங்கள் : சூரியன் - செவ்வாய் - சந்திரன்
🌟 குருவின் பகை கிரகங்கள் : புதன் - சுக்கிரன்
🌟 குருவின் சமமான கிரகம் : சனி - ராகு - கேது
🌟 குருவின் தசா காலங்கள் : 16 வருடங்கள்
🌟 குருவின் நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
குண நலன்கள் :
🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி முழு சுபராக இருந்தாலும் அவர் எவ்விதமான செயல்களையும் விரும்பி செய்யாமல் சோம்பேறித்தனமான நிலையை கொண்டவர்.
🌟 குரு தான் இருக்கும் ராசிக்கு செய்யும் பலன்களை விட தன் பார்வையால் பார்க்கும் ராசிகளுக்கு அதிக பலனை அளிக்கக்கூடியவர்.
🌟 'குரு பார்வை கோடி புண்ணியம்"
🌟 குரு தனித்து இருந்தால் ஏற்படும் பலன்கள் என்பது மிகவும் குறைவு. அதாவது
🌟 'அந்தணன் தனித்திருந்தால் அவதிகள் மெத்தமுண்டு"
🌟 பெருந்தன்மையான குணத்தை கொண்டவர்கள். தெய்வ காரியங்கள், பிறருக்கு உதவும் குணம், நீதி மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
🌟 ஆகவே, குரு என்னும் பிரகஸ்பதி ஒவ்வொரு ராசி வீடுகளில் இருக்கும்போது அவரால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை இனி வரும் நாட்களில் நாம் காண்போம்.
மேஷ ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
🌟 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன், குரு நட்பு என்ற நிலையில் நின்று புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 பெருந்தன்மையான குணம் உடையவர்கள்.
🌟 நன்கு சிந்தித்து முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.
🌟 அனைவரையும் கட்டுப்படுத்தும், அதே சமயம் இனிமை கலந்த பேச்சுகளை உடையவர்கள்.
🌟 எடுத்த காரியத்தில் எந்த பிழையுமின்றி திறமையுடன் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
🌟 சுயநலம் இல்லாமல் பொதுநல செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.
🌟 தனது கௌரவம் எந்நிலையிலும் பாதிக்கா வண்ணம் செயல்படக்கூடியவர்கள்.
🌟 சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.
🌟 அனைவருக்கும் பேதமின்றி உதவக்கூடியவர்கள்.
🌟 எதிலும் விளம்பரம் தேடாதவர்கள்.
🌟 நித்திரை சுகம் உடையவர்கள்.
🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லக்கூடியவர்கள்.
🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.
🌟 எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள்.
🌟 ஆன்மீக வழிபாடு மற்றும் பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.
🌟 குலப்பெருமை உயரும்படியான செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக