தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் பெயரில் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர் டிசம்பர் 15 வரை செய்யலாம். மேலும் இதற்கான முகாம்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 21 ,22, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டிசம்பர் மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்கா:ளர் பட்டியல் 22.01.2021 அன்று வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் 01.01.2021 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அளிக்க வேண்டும்.
முகவரி சான்றுக்காக
பாஸ்போர்ட்,
கேஸ் பில்,
தண்ணீர் வரி ரசீது,
ரேஷன் அட்டை,
வங்கி கணக்கு புத்தகம்,
ஆதார் அட்டை
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.
வயது சான்றுக்காக
10 ஆம் வகுப்பு சான்றிதழ்,
பிறப்பு சான்றிதழ்,
பான் கார்டு,
ஆதார் அட்டை,
ஓட்டுனர் உரிமம்,
பாஸ்போர்ட்,
கிசான் கார்டு
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.
அடையாள சான்றாக
பான் கார்டு
ஓட்டுனர் உரிமம்
ரேஷன் கார்டு
போட்டோ உடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம்,
10 ஆம் வகுப்பு சான்றிதழ்
மாணவர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக