மகாராஷ்டிராவில் பணத்திற்காக மாதத்திற்கு ஒருவரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில்
கொரோனா காரணமாக பலரும் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்
சமீபத்தில் ஒரு நபர் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார். விசாரணையில் அவரது வீட்டில் இருந்த விலை மதிப்புடைய பொருட்களும்
காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதும், புகார் அளித்த
ஆசாமியிடம் திருமணம் ஆகவில்லை என சொல்லி திருமணம் செய்து கொண்டு பொருட்களை திருடி
சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று மாதங்களில் இதுபோன்று மூன்று நபர்களை திருமணம்
செய்து கொண்டு பிறகு அவர்களிடம் இருந்து பொருட்களை, பணத்தை திருடிக் கொண்டு
சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா பகுதியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக