Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 நவம்பர், 2020

குரங்கின் தந்திரம்

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது.

 

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 

 

நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது.

 

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது.

 

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது.

 

நீதி :

நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக