Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

பிரபலமான டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்? அதுவும் இவ்வளவு குறைவான விலையிலா?

பிரபலமான டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்? அதுவும் இவ்வளவு குறைவான விலையிலா?

ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டை டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களினால் கடந்த சில வாரங்களாக லிமிடேட் எடிசன்களின் வருகைகளை அதிகளவில் இந்திய சந்தையில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் எண்டார்க் ஸ்கூட்டரின் சூப்பர்ஹீரோ-தீம்டு எடிசன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்நிறுவனத்தின் 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கும் மூன்று ரைடிங் மோட்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க சஸ்பென்ஷன் & லிவர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் தற்போது இந்திய சந்தையில் மிக பிரபலமான ஸ்கூட்டர் மாடலாக உள்ள ஜூபிட்டரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்களின்படி பார்க்கும்போது, இந்த புதிய வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.63,486-ல் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் டி க்ரே என்ற இரு நிறங்களில் வெளிவரவுள்ள ஜூபிட்டரின் இந்த புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டின் வருகையுடன் இந்த ஸ்கூட்டரின் கிளாசிக் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.80,000 வரையில் உயர்த்தப்படவும் உள்ளது.

டிவிஎஸ் ஜூபிட்டரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட் குறித்து காடிவாடி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள படங்களின் மூலம் பார்க்கும்போது, இந்த வேரியண்ட்டில் ஹலோஜன் ஹெட்லேம்ப் மற்றும் ஷீட் மெட்டல் சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்படப்படவுள்ளன.


மற்றப்படி வழக்கமான 109.7சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு சிவிடி கியர்பாக்ஸை பெறும் ஜூபிட்டரின் பிஎஸ்6 வெர்சன் கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் புதிய பேஸ் வேரியண்ட்டில் ப்ரேக் அமைப்பாக முன் மற்றும் பின் சக்கரத்தில் ட்ரம் ப்ரேக் வழங்கப்பட்டிருக்கும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக