தரமான அறிவிப்பு ஒன்றை ஜெர்மனி நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு நாட்டில் மட்டுமே இதற்கான நடவடிக்கைகள் காணப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிலையேக் காட்சியளிக்கின்றது. உலக நாடுகளின் இந்த நடவடிக்கையினால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதுமுக மின் வாகனங்களை மிக தீவிரமாக அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஜெர்மன் அரசாங்கம் மின் வாகனங்களின் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அதன் மானிய திட்டத்தை கூடுதலாக ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் பல மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மானியம் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இதனடிப்படையிலேயே ஜெர்மன் நாட்டு அரசாங்கமும் 2025ம் ஆண்டு வரை மின் வாகனங்களுக்கான மானியத்தை நீட்டித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும் மின்சார வாகனத்தின் விலை மிக அதிகமானதாக உள்ளது. எனவேதான் தற்போது வரை இந்த வாகனத்தின் விற்பனை குழந்தை பருவத்திலேயேக் காட்சியளிக்கின்றது.
இந்த தடையை நீக்கும் விதமாகவே ஜெர்மன் அரசு மானியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை நீட்டித்தும் இருக்கின்றது. கடந்த ஜூன் மாததத்தில் மின்சார கார்களுக்கான சலுகைகளை ஜெர்மனி அரசாங்கம் இரட்டிப்பாக்கியது. இதில் மின்சார வாகனங்களுக்கு 3 ஆயிரம் யூரோக்களும், ஹைபிரிட் வாகனங்களுக்கு 2,250 யூரோக்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த மானிய திட்டத்தையே ஜெர்மன் அரசு வருகின்ற 2025ம் ஆண்டு வரை மக்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதேபோன்று பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் வாகன உரிமையாளர்களுக்கும் சிறப்பு மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என அது கூறியிருக்கின்றது.
ஜெர்மனியில் மட்டுமின்றி இந்தியாவிலும் மின் வாகனங்களுக்கான மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. வாகனத்தின் பேட்டரி திறன் மற்றும் விலையைப் பொருத்து மானியம் வழங்கப்படுகின்றது. இதனால் முன்பைக் காட்டிலும் இந்தியாவில் தற்போது மின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் மின் வாகனங்களின் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. சென்னையில் தற்போது வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அண்மையில் தமிழக அரசு அண்மையில் மின் வாகன கொள்கைப் பற்றிய தகவலை வெளியிட்டது. அதில் மின் வாகனங்களுக்கான வரி விலக்கு பற்றிய தகவலை அது கூறியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக