Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

மாதவிடாய் சமயத்தில் பெண்ணுறுப்பில் ஏற்படும் எரிச்சலை போக்குவது எப்படி?

 மாதவிடாய் சமயத்தில் பெண்ணுறுப்பில் ஏற்படும் எரிச்சலை போக்குவது எப்படி? |  Latest Entertainment News

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் சரும பிரச்சினை இந்த சரும தடிப்புகள். அந்தரங்க பகுதியில் ஏற்படும் உள்ளாடை உராய்வு, நாப்கின்கள் பயன்படுத்துதல் இவற்றால் அங்கே சரும தடிப்புகள், சருமம் சிவத்தல் இவை ஏற்படலாம். இதை சில எளிய டிப்ஸ்கள் மூலம் சரி செய்ய முடியுமாம். அது எப்படி என அறிவோம்.

மாதவிடாய் காலமே பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வரும் போது அதனால் ஏற்படும் அறிகுறிகளும் பெண்களை பெருமளவு வேதனைபடச் செய்கிறது. மாதவிடாய் காலங்களில் அந்தரங்க பகுதியில் சிவத்தல், சரும வடுக்கள் போன்ற பிரச்சினை உண்டாக வாய்ப்புள்ளது. அங்குள்ள சருமத்தில் ஏற்படும் உள்ளாடை உராய்வு காரணமாக இந்த பிரச்சினை ஏற்படலாம். இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது ஏற்படும் வியர்வை இவற்றால் கூட அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படலாம். இந்த சரும வடுக்களை எப்படி எளிய வழியில் போக்கலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

​மாற்று வழிகளைக் கவனியுங்கள்

நீங்கள் மாதவிடாய் கால சரும வடுக்களை போக்க நல்ல காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை அணியலாம். இந்த உள்ளாடைகள் வியர்வையை உறிஞ்ச உதவி செய்யும்.

நீங்கள் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது செளகரியமாக இல்லாவிட்டால் டம்பான்கள் அல்லது மாதவிடாய் கோப்பை போன்ற பிற தயாரிப்புகளுடன் அதை மாற்ற விரும்பலாம்.

​நாப்கின்கள்

உங்க மாதவிடாய் நாப்கின்களை அடிக்கடி மாற்றுங்கள். மாதவிடாய் காலங்களில் ஒரே நாப்கின்களை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்துவது உங்க பெண்ணுறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவும் சரும வடுக்களை உண்டாக்குகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் உங்க நாப்கின்களை அடிக்கடி மாற்றுவது நல்லது. அதிக ரத்தப் போக்கு இருந்தாலும் இல்லாமல் போனாலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நாப்கின்களை மாற்றுவது நல்லது.

​சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள்

உங்க மாதவிடாய் காலங்களில் எப்பொழுதும் சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள். பருத்தி உள்ளாடைகளை தேர்வு செய்யுங்கள். உங்க சருமம் நன்றாக சுவாசிக்க காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். அந்த இடத்தில் ஈரப்பதம் இல்லாவிட்டால் சரும தடுப்புகள் வரும குறைவு.

​சுகாதாரத்தை பேணுங்கள்

உங்க பெண்ணுறுப்பு பகுதியில் தொற்று நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவில் இருந்து விடுபட ஒவ்வொரு சில மணி நேரமும் பெண்ணுறுப்பு பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். எனவே அந்த பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

​டால்கம் பவுடர் பயன்படுத்துங்கள்

பேபி பவுடர் போன்ற லேசான டால்கம் பவுடரைப் பயன்படுத்துவது உராய்வைக் குறைப்பதன் மூலம் தடிப்புகளைப் பெறும் அபாயத்தைக் குறைக்கும்.இது எந்த கூடுதல் ஈரப்பதத்தையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் அந்த பகுதியை உலர வைக்கிறது.எனவே மேற்கண்ட வகையில் மாதவிடாய் கால தடிப்புகளை நாம் போக்க முடியும். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக