ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட ஐபோன்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெறுகின்றன. அதாவது தனித்துவமா சிப்செட், சிறந்த பாதுகாப்பு, அருமையான கேமராக்கள் உட்பட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டு ஐபோன்கள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சிறிய வயது முதல் ஐபோன் தான் வாங்க வேண்டும் என்று லட்சியம் கொண்ட ஒரு இளைஞர் ஆன்லைன் கள்ளச்சந்தையில் தனது கிட்னியை விற்று பணம் பெற்றது தெரிய வந்தது.
அந்த இளைஞரின் பெயர் வாங் ஷாங்கன், இவர் சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தான் சிறிய வயது முதலே ஐபோன் வாங்க வேண்டுமென்ற லட்சியம் இருந்த வந்தது. ஆனால் விலை அதிகமான ஐபோனை வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை என்று தெரிகிறது.
பின்பு இந்த கனவை நனவாக்க என்ன செய்யலாம் என்று தவித்து கொண்டிருந்த போதுதான் அவருக்கு சில கெட்ட சேர்கைகள் சேர்ந்தன. அந்த கெட்ட சேர்கைகள் மூலம் ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் வாங்கிற்கு கிடைத்தது.
அதன்பின்பு இரு கிட்னிகள் தேவையில்லை ஒரு கிட்னி இருந்தாலே உயிர் வாழ முடியும். எனவே வலது கிட்னியை விற்று விடு என நண்பர்கள் வாங்கை உசுப்பேற்றியதாக தெரிகிறது. பின்னர் 14 வயது கொண்ட வாங், ஒரு கிட்னி போனாலும் பரவாயில்லை ஐபோன் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
இதனையடுத்து தனது வலது கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டார். பின்னர் அந்த நண்பர்களும் அறுவை சிகிச்சை மூலம் கிட்னியை பெற்று கொண்டார். அவர்கள் கொடுத்த பணத்தில் ஐபாட் 2, ஐபோன் 4 சாதனத்தை வாங்கியுள்ளார் வாங்.
இந்நிலையில் அவரது இடது கிட்னியில் தொற்று ஏற்பட்டுவிட்டது. இதை கவனிக்காமல் விட்ட வாங்கின் உடல்நிலை மோசமடைந்தது. பின்பு இதுகுறித்து வாங்கிடம் அவரது தாயார் வசாரித்ததில் கிட்னி விவகாரத்தை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வாங்கின் தாய் அளித்த புகாரின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் தற்போது வாங் தினந்தோறம் டயலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மோசமான நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக