Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 நவம்பர், 2020

பெட்ரோல் செலவு அதிகமாகுகிறதா? பைக்கின் மைலேஜை அதிகப்படுத்த எளிய 10 வழிகள் இதோ

 பெட்ரோல் செலவு அதிகமாகுகிறதா? பைக்கின் மைலேஜை அதிகப்படுத்த எளிய 10 வழிகள் இதோ

குறிப்பாக இந்தியாவில் புதிய பைக் வாங்கும்போது மைலேஜ் என்ற விஷயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தெரியாமல் குறைவான மைலேஜ் கொண்ட பைக்கை வாங்கியவர்கள் அதனை உடனே வேறொருவருக்கு விற்றுவிடவும் தயங்குவதில்லை.

ஆனால் சில நடவடிக்கைகள் மூலமாக உங்களது பைக்கின் மைலேஜை மேம்படுத்த முடியும். அவற்றுள் 10 முக்கிய குறிப்புகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

*பைக்கில் பழுது ஏற்பட்டால் உடனே சர்வீஸ் மையத்திற்கு எடுத்து சென்றுவிடுங்கள். ஏனெனில் நீண்ட காலமாக இயக்கத்தில் இல்லாத பைக்கின் என்ஜின் எரிபொருள் செலவை அதிகப்படுத்தும். அதேபோல் சர்வீஸ் செய்யும்போது தயாரிப்பு நிறுவனம் கூறும் ஆயிலையே பயன்படுத்துங்கள்.

*சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் பழுது சரிபார்த்தல்களினால் என்ஜின் அமைப்பில் உள்ள கார்புரேட்டரின் அமைப்புகள் சிறந்த மைலேஜிற்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இத்தகைய ரீ-ட்யூனிங் கார்புரேட்டர்கள், குறைவான எரிபொருளில் பைக் இயங்கும்போது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

*டயரின் காற்று அழுத்தம் பைக்கின் மைலேஜ் விஷயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. குறைவான காற்று கொண்ட டயர்கள், சக்கரங்கள் சாலையில் உராய்வதை அதிகப்படுத்தும். இதனால் மைலேஜின் அளவு குறையும். எனவே பைக் வாங்கும்போது தயாரிப்பு நிறுவனம் கூறிய அழுத்தத்தில் டயரின் காற்றை சரியாக பராமரியுங்கள்.

*தொடர்ந்து தரமான எரிபொருள்களை பயன்படுத்துவது பைக்கின் மைலேஜ்ஜை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும். தரமான பெட்ரோல், என்ஜினின் ஆயுளை அதிகரிப்பது மட்டுமில்லாமல், பைக்கின் எரிபொருள் திறனையும் அதிகப்படுத்தும்.

*திடீரென கொடுக்கப்படும் அதிகப்படியான ஆக்ஸலரேஷன் மற்றும் ப்ரேக் கட்டையை உடைப்பதுபோல் கொடுக்கப்படும் ப்ரேக் உள்ளிட்டவை பெட்ரோலை வீணாக்கக்கூடியவைகளாகும். இதனால் குறைவான கியரில் அதிக ஆர்பிஎம்-இல் ஆக்ஸலரேஷன் கொடுக்கப்பதை தவிர்க்கவும்.

*இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த மைலேஜ்ஜை பெற பைக்கை முடிந்தவரை 50 - 60 kmph வேகத்தில் இயக்க பாருங்கள் என அறிவுறுத்துகின்றன. இதனால் இதனை விடவும் குறைவான வேகத்தில் பைக்கை இயக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் போக்குவரத்து நிறைந்த சாலைகளை தவிர்க்க முடிந்தால், முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.

*இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சிக்னல்களில் நிற்கும்போது என்ஜினை ஆஃப் செய்யுங்கள். ஏனெனில் வேகமானி இயக்கத்தில் இருந்தால், உங்களது எரிபொருள் வீணாகிறது என்று அர்த்தம். இது பலருக்கு தெரிந்திருந்தாலும், அங்கு செலவாகும் எரிபொருளை காட்டிலும், என்ஜினை அணைக்காததால் கூடுதலாக கிடைக்கும் 2,3 வினாடி நேரத்தை தான் ஓட்டுனர்கள் பெரிதாக பார்க்கின்றனர். சிக்னலில் 40 வினாடிகளுக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், தாரளமாக பைக்கின் என்ஜினை அணைத்துவிடலாம்.

*உங்கள் மோட்டார்சைக்கிளை சூரிய ஒளியில் நிறுத்துவதால் சிறிய அளவு எரிபொருள் ஆவியாகிவிடும். அளவு சிறியதாக இருந்தாலும், தினமும் 9 மணிநேரமும், மாதத்திற்கு 30 நாட்களும் அதை நிறுத்துவது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் முடிந்தவரை நிழலில் பைக்கை நிறுத்துங்கள். குறிப்பாக வீடு, அலுவலம் போன்ற நீண்ட நேரம் பைக் நிறுத்தப்படும் இடங்களில்.

*சேவை இடைவெளிகளில், பைக்கின் சங்கிலியை சுத்தம் மற்றும் உயவு செய்வது அவசியமாகும். நீங்கள் அதிக அழுக்கு மற்றும் மணல் உள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், அதைச் செய்வது பெரும்பாலும் மைலேஜை பெற உதவும். ஏனெனில் அவ்வாறு செய்வதால் சங்கிலியை சுழற்றுவதற்கு என்ஜின் குறைவான ஆற்றலையே எடுத்து கொள்ளும்.

*பைக்கில் மாடிஃபை மாற்றங்களை அதிகளவில் கொண்டுவராதீர்கள். தொழிற்சாலையில் பொருத்தப்படும் பாகங்களும் ஒரு வகையில் பைக்கின் சிறந்த மைலேஜிற்கு காரணமாக விளங்கி வரலாம். அவற்றை மாற்றினால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக கஸ்டம் எக்ஸாஸ்ட் குழாய்கள், காற்று வடிக்கட்டி மற்றும் கூடுதல் அகலமான டயர்கள் உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடுங்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக