Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் தரமான லெனோவா லீஜியன் போன் டூயல்.!

லெனோவா லீஜியன் போன் டூயல்



கடந்த ஜூலை மாதம் சீனாவில் தரமான லெனோவா லீஜியன் போன் டூயல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதி மற்றும் தனித்துவமான கேமராக்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. தற்சமயம் வெளிவந்த தகவலின்படி இந்தியாவில் விரைவில் லெனோவா லீஜியன் போன் டூயல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

லெனோவா லீஜியன் போன் டூயல் ஆனது பாப் செல்பீ கேமரா, இரட்டை பேட்டரி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் சேர்த்தல்களில் ஒன்று லீஜியன் அசிஸ்டென்ட், இது மெய்நிகர் ஜாய்ஸ்டிக் செயல்பாட்டை செயல்படுத்துகிறது மற்றும் மெய்நிகர் கேபேட் கட்டுப்பாடுகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வீடியோக்கள் அல்லது நேரடி ஸ்ட்ரீமிங் கேம்களைப் பதிவு செய்யும்போது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க நாய்ஸ் கேன்சலேஷன் வசதியையும் பெறுவீர்கள்.

 

லெனோவா லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம், 144Hz refresh rate, 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.



குறிப்பாக இந்த லீஜியன் போன் டூயல் ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு உடன் லீஜியன் ஒஎஸ் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி பாப் செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த சாதனம், இது பக்கவாட்டில் உள்ள பாப்-அப் தொகுதி ஆகும். குறிப்பாக இந்த செல்பீ கேமரா லாண்ட்ஸ்கேப் பயன்முறையில் கேம்களை விளையாடும்போது வீடியோக்களைப் பதிவு செய்ய அல்லது செல்பீக்களைப் பிடிக்க அருமையாக உதவுகிறது.

 

லெனோவா லீஜியன் போன் டூயல் மாடலில் இரண்டு 2500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, அதாவது மொத்தமாக 5000எம்ஏஎச் பேட்டரிதிறன் கொண்டுள்ளது. மேலும் 90வாட் டர்போ பவர் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது, எனவே இது 50சதவிகிதம் சார்ஜை வெறும் 10நிமிடங்கிளல் சேர்க்கும். முழுமையாக சார்ஜ் செய்ய 30நிமிடங்கள் ஆகும்.

 

மேலும் இந்த சாதனம் வெப்பத்தை சிதறடிக்க செப்பு குழாய்களுடன் இரட்டை திரவ-குளிரூட்டலைக் கொண்டுள்ளது. 5 ஜி, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11ax, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, கியூசட்எஸ்எஸ் (எல் 1 + எல் 5), 2 எக்ஸ் யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் என்.எஃப்.சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். லெனோவா லீஜியன் போன் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.37,400-ஆக உள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக