Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 நவம்பர், 2020

இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?

இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?

நீண்ட தூரம் பயணத்திற்கும் வசதியான பயணத்திற்கும் அனைவரும் விரும்புவது ரயில் பயணத்தைதான். ரயிலில் பயணிக்க, மக்கள் பல மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்கிறார்கள். முன்பதிவுக்காக இரண்டு வகையான புக்கிங் செய்யப்பட்டுகின்றன. ஒன்று டிக்கெட் முன்பதிவு மையம், மற்றொன்று ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு (Online Ticket Reservation). ஒரு வேளை சிலருக்கு திடீரென்று பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இது போன்ற சூழல்களில், மக்கள் தத்கால் டிக்கெட்டுகளை இதற்கான ஒரே வழியாக கருதுகின்றனர்.

ஆனால், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை (Platform Ticket) வைத்துக்கொண்டு கூட ஒருவர் ரயில்களில் பயணிக்க முடியும். ஆம் இது உண்மைதான்!! இது குறித்து ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்பதை பார்க்கலாம்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டில் பயணம்

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை மட்டுமே வைத்துக்கொண்டு நீங்கள் ரயிலில் ஏறிவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் டிக்கெட் செக்கரிடம் சென்று டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இப்படி ரயில்வேயின் (Indian Railway) ஒரு விதி உள்ளது. அவசரகாலத்தில், ஒரு பயணி ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம். ஆனால் அப்படி ஏறியவுடன் அவர் உடனடியாக TTE ஐ தொடர்பு கொள்ள வேண்டும். செல்லும் இடத்திற்கான டிக்கெட்டை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும், இருக்கைகள் காலியாக இல்லாவிட்டால் TTE உங்களுக்கு ரிசர்வ் இருக்கை கொடுக்க மறுக்கலாம்.

இருப்பினும், நீங்கள் பயணிப்பதை யாரும் தடுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பயணிகளிடமிருந்து 250 ரூபாய் அபராதம் மற்றும் பயண கட்டணம் வசூலிக்கப்படும்.

இதன் நன்மை என்ன

பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் நன்மை என்னவென்றால், பயணிகள் அவர்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை எடுத்த இடத்திலிருந்து கட்டணத்தை செலுத்த வேண்டும். அவர் பயணம் செய்யும் அதே வகுப்பிற்கான கட்டணம்தான் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும்.

நீங்கள் ரயிலை தவறவிட்டால் என்ன செய்வது?

சில சமயங்களில் பயணி ரயிலை தவறவிட்டால், ரயிலும் போய்விட்டது, பணமும் வீணானது என வருத்தப்படுவதைக் கண்டுள்ளோம். இருப்பினும், ரயிலை நாம் தவறவிட்டாலும் பணத்தைத் திரும்பப் பெற முடியும். ரயிலை தவற விட்டால், பயணிகள் டி.டி.ஆரை நிரப்பி, தங்கள் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம். ஆனால், பயணிகள் இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும்.

TTE வேறு யாருக்கும் உங்கள் இருக்கையை கொடுக்க முடியாது

உங்கள் ரயில் தவறிவிட்டால், அடுத்த இரண்டு நிலையங்களுக்கு TTE உங்கள் இருக்கையை ஒதுக்க முடியாது. அடுத்த இரண்டு நிலையங்களில் ரயிலுக்கு முன்பாக வந்து நீங்கள் ரயிலில் ஏறலாம். ஆனால், இரண்டு நிலையங்களுக்குப் பிறகு, டி.டி.இ இந்த இடத்தை ஆர்.ஏ.சி டிக்கெட் கொண்ட பயணிகளுக்கு ஒதுக்க முடியும்.

ரயில் டிக்கெட்டை தொலைத்து விட்டாலும் கவலை வேண்டாம்

நீங்கள் ரயில் பயணத்திற்கு ஒரு இ-டிக்கெட்டை எடுத்திருந்து, ரயிலில் உட்கார்ந்த பிறகு, டிக்கெட் தொலைந்துவிட்டதைக் கண்டறிந்தால், டிக்கெட் சரிபார்ப்பவருக்கு (TTE) 50 ரூபாய் அபராதம் செலுத்தி உங்கள் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக