வங்கி சேமிப்பு கணக்குகளை விட குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்து இருந்தால் போதும் என்பதால் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகள் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது வந்தது.
இதுவரை அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாயாக இருந்து வந்தது.
டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் இதை 500 ரூபாயாக உயர்த்துவதாக அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒருவேலை இந்த 500 ரூபாய் என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்வகிக்கவில்லை என்றால், ஆண்டுக்கு 100 ரூபாய் என அபராதம் விதிக்கப்படும். நாளடைவில் அந்த சேமிப்பு கணக்கே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலானவர்கள், முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் போன்றவற்றை வைத்துள்ளவர்கள். அவர்களுக்கு வரும் பென்ஷனை பெற மட்டுமே அந்த கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
இப்படி அவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு, 500 ரூபாயாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தும்போது மிகப் பெரிய நிதி நெருக்கடியில் அவர்கள் சிக்குவார்கள். எனவே அதை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தினால் நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக