கூகிள் நிறுவனம் நேற்று தனது கூகிள் டிராவல் முன்பதிவு சேவையில் COVID தொடர்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு தகவல்களைச் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. கூகிள் டிராவலில், கடந்த ஆறு மாதங்களில் விமானம் மற்றும் ஹோட்டல் கிடைப்பதற்கான வாய்ப்புகளையும், அப்பகுதியில் உள்ள COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை போன்ற உள்ளூர் தகவல்களுக்கான இணைப்புகளையும் கூகிள் இப்பொழுது சேர்த்துள்ளது.
COVID-19 வழக்குகள் பற்றிய தகவல்
நீங்கள் ஒரு புதிய நகரத்தைச் சுற்றிப்பார்க்கத் திட்டமிட்டால், கூகிள் மேப்ஸில் உள்ள COVID லேயரைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியில் உள்ள COVID-19 வழக்குகள் பற்றிய தகவல்களை விரைவாகப் பெறலாம், எனவே நீங்கள் எங்குச் செல்ல வேண்டும், என்ன செய்வது என்பது குறித்த முடிவுகளை நீங்கள் பாதுகாப்பாக எடுக்கலாம். google.com/travel மூலம் ஹோட்டல் விலை மற்றும் அவைலபிலிட்டி தகவலுடன் ஹோட்டல் விபரங்களைப் பார்வையிடலாம்.
Google மேப்ஸ்
உங்கள் பயணத்திற்கு நீங்கள் துவங்கும் பொழுது, வழியில் உள்ள பயனுள்ள பாதுகாப்பு தகவல்களை அறிந்துகொள்ள நீங்கள் Google மேப்ஸ் பயன்படுத்தலாம். நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், தேசிய எல்லைகளைக் கடக்கும்போது, உங்கள் பாதையில் COVID-19 சோதனைச் சாவடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும்.
உள்ளூர் போக்குவரத்து எச்சரிக்கை
நீங்கள் பொது போக்குவரத்தை எடுக்கத் திட்டமிட்டால், உள்ளூர் போக்குவரத்து நிறுவனங்களின் எச்சரிக்கைகளைக் கூகிள் உங்களுக்குத் தெரியப்படுத்தும். இதன் மூலம் அந்த அப்பகுதியில் அரசாங்கம் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகளைக் கட்டாயமாக்குகிறதா அல்லது பஸ் அல்லது ரயிலில் சவாரி செய்யும் போது நீங்கள் பாதுகாப்பாக மாஸ்க் அணிய வேண்டுமா என்பது போன்ற தகவல்களை இனி கூகிள் மேப்ஸ் உங்களுக்கு விரைவாகத் தெரியப்படுத்தும்.
பயணித்த மொத்த கிலோமீட்டர் கணக்கு
கூகிளின் ஆண்ட்ராய்டு மேப்ஸ் டைம் லைனில் பயனர்களின் பயண தகவல்களைச் சேர்க்கும் திட்டங்களைக் கூகிள் விவரித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், நீங்கள் இதுவரை பார்வையிட்ட இடங்கள், பயணித்த மொத்த கிலோமீட்டர் கணக்குகள் மற்றும் நீங்கள் பயன்படுத்திய போக்குவரத்து முறைகள் பற்றிய தகவல்களுடன் உங்கள் கடந்த விடுமுறைகளின் சுருக்கத்தையும் நீங்கள் பார்வையிடலாம் என்று கூகிள் தெரிவித்துள்ளது.
ஷேர்
உங்கள் லொகேஷன் ஹிஸ்டரி செட்டிங்கை இயக்க நீங்கள் தேர்வுசெய்தால், இந்த அம்சத்தை உங்களின் டிராவல் டைம் லைன் கருவியாகப் பயன்படுத்தலாம். உங்கள் பயணத்தைப் பற்றியோ அல்லது விடுமுறை பரிந்துரைகளை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதை ஷேர் செய்துகொள்ளவும் கூகிள் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக