Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

Honor பிராண்டை சீன அரசுக்கு விற்கும் ஹூவாய்.. இந்திய மக்கள் நிலை என்ன..?

15.2 பில்லியன் டாலர்


மொபைல் தயாரிப்பிலும், தொழில்நுட்பத்திலும் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குக் கடுமையாகப் போட்டியாக விளங்கும் ஹூவாய் நிறுவனம் விலை உயர்ந்த போன்களை மட்டுமே விற்பனை செய்யாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்ற திட்டத்துடன் உருவாக்கிய பிராண்ட் தான் Honor.

Honor பிராண்டின் கீழ் ஸ்மார்ட்போன், லேப்டாப் எனப் பல தயாரிப்புகள் இருந்தாலும் இந்தியாவிலும், தென் ஆசிய நாடுகளில் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமானது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Honor போன்களின் தரத்திற்கு ஒரு மதிப்பு உண்டு. இதனால் கணிசமான வர்த்தகச் சந்தையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் பட்ஜெட் போன் பிராண்டான Honor நிறுவனத்தையும், வர்த்தகத்தையும் மொத்தமாக அந்நாட்டின் ஸ்மார்ட்போன் விநியோக நிறுவனமான டிஜிட்டல் சீனா மற்றும் சீனாவின் Shenzhen மாகாண அரசுக்கும் பெரிய தொகைக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீன நிறுவனங்கள்

ஏற்கனவே சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளைத் திருடுவதாகவும், கண்காணிப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஹூவாய் சிறப்பான லாபத்திலும் வர்த்தகத்திலும் இருக்கும் நிலையில் தனது பட்ஜெட் பிராண்ட் Honor அரசுக்கு விற்கப்படும் காரணத்தால் பல விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடை உத்தரவு

அமெரிக்க அரசு சீனாவின் ஹூவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் மீது தடை விதித்துள்ள காரணத்தால், வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில் ஹூவாய் இறங்கியுள்ளது.

சாம்சங் நிறுவனத்திற்குப் போட்டியாக அதிநவீன ஸ்மார்ட்போன்களைத் தயாரிப்பதிலும், கார்பரேட் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதிலும் இனி கவனத்தைச் செலுத்த ஹூவாய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஜோ பிடன் வெற்றி

மேலும் ஆட்சி மாற்றத்தின் மூலம் ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதை உணர்ந்தே ஹூவாய் எந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா உட்படப் பல நாடுகள் ஹூவாய் நிறுவனத்தின் டெலிகாம் உபகரணங்கள் மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15.2 பில்லியன் டாலர்

ஹூவாய் மற்றும் டிஜிட்டல் சீனா, Shenzhen மாகாண அரசுக்கு இடையில் நடக்கும் இந்த ஒப்பந்தத்தில் Honor நிறுவனத்தின் பிராண்டு, ஆராய்ச்சி கூடம், சப்ளை செயின் ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு சொத்துகளைச் சுமார் 15. 2 பில்லியன் டாலர், இது சீன யுவான் மதிப்பில் கிட்டதட்ட 100 பில்லியன் யுவான் மதிப்புடையது.

அறிவிப்பு

இதுகுறித்து ஹூவாய் இன்னும் எவ்விதமான செய்திகளையும் வெளியிடாத நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அச்சம்

சீனா நிறுவனங்கள் மத்தியில் ஏற்கனவே தகவல் பாதுகாப்பு பிரச்சனை இருக்கும் நிலையில் தற்போது Honor நிறுவனம் நேரடியாக அரசு கைகளில் செல்லும் காரணத்தால் இந்தப் போன்களைப் பயன்படுத்துவோரின் தகவல் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுகிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக