Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 நவம்பர், 2020

முரட்டு டுவிஸ்ட்: 4 செல்போன்களை திருடி தனது செல்போனை மறந்து விட்டுச் சென்ற திருடன்!

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

சென்னையில் வீட்டுக்குள் புகுந்த 2 திருடங்கள் அங்கிருந்த 4 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இதில் ஒரு திருடன் தனது செல்போனை அங்கேயே மறந்து விட்டுச் சென்ற நிலையில் இதையறியாத மற்றொரு திருடன் அந்த செல்லுக்கு கால் செய்து பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளான். இதன்மூலம் திருடர்களின் பெயர் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.

செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம்

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவல், புகைப்படம் உட்பட வங்கி கணக்கு வரை செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.

வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருட்டு

இந்த நிலையில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஹோட்டலில் பணிபுரியம் ஐந்து இளைஞர்கள் அதேபகுதியில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

4 செல்போன்கள் திருட்டு

இரவில் வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து உறங்கியுள்ளனர். இதை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டுக்குள் புகுந்த அங்கிருந்த 4 செல்போன்களையும் திருடி உள்ளனர்.

செல்போனை மறந்துவிட்டுச் சென்ற திருடன்

திடீரென வீட்டுக்குள் சத்தம் கேட்டதை அறிந்த தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் கண் விழித்து வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அதற்குள் திருடர்கள் செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் தப்பியோடிய இரண்டு திருடர்கள் ஒருவன் செல்போனை அங்கேயே விட்டுவிட்டு ஓடியுள்ளான்.

காவல்நிலையத்தில் புகார் அளித்த இளைஞர்கள்

இதையடுத்து அந்த இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீஸார் திருடனின் செல்போனை கைப்பற்றி வைத்தனர். இதுகுறித்து தெரியாத மற்றொரு திருடன் அந்த எண்ணுக்கு கால் செய்து ஆகாஷ் எங்க இருக்க நான் விஷ்னு பேசுகிறேன் என கூறியுள்ளார்.

குற்றாவாளிகளின் பட்டியலுடன் ஒப்பிட்டு விசாரணை

இதன்மூலம் திருடர்களின் பெயர் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்கள் இருவரது பெயரும் தெரிந்துக் கொண்ட காவல்துறையினர் பழைய குற்றாவாளிகளின் பெயர் பட்டியலுடன் ஒப்பிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக