Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

தடை அதை உடை! மீண்டும் இந்தியாவிற்குள் வரும் PUBG; எப்போது?


2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் PUBG கேம் மீண்டும் இந்தியாவிற்குள் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் PUBG-இன் தலைவிதியானது ரோலர் கோஸ்டர் சவாரியில் செல்வது போலத்தான் உள்ளது. டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி வீடியோ கேம் ஆனது, தீபாவளியைச் சுற்றி இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளது மற்றும் இந்த தகவலை நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த அறிக்கை, குறிப்பிட்ட தகவல்களை வெளிப்படுத்திய இரண்டு ஆதாரங்களும் இந்த விஷயத்தைப் பற்றி பொதுவில் பேச அனுமதி இல்லாததால் அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

"அவர்களை" பொறுத்தவரை, இந்திய பயனர்களின் தரவை (தகவல்களை) சேமிப்பதற்காக உலகளாவிய கிளவுட் சேவை வழங்குநர்களுடன் PUBG கார்ப் கூட்டு சேர்ந்துள்ளது. இது சீன சேவையகங்களில் தகவல்களை சேமிப்பது தொடர்பான இந்தியாவின் கவலைகளுக்கு ஒரு தீர்வை வழங்குகிறது.

PUBG நிறுவனம், அது மீண்டும் இந்தியாவிற்குள் வருவது குறித்து நாட்டில் உள்ள சில உயர் ஸ்ட்ரீமர்களுக்கு தகவல் அளித்துள்ளது, இது இந்த ஆண்டு இறுதிக்குள் சாத்தியமாகும். இந்த வாரம் விரைவில் பப்ஜி நிறுவனம் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட முடியும்.

கூடுதலாக, அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையின்போது நாட்டில் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை நடத்தவும் பப்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஒரு வட்டாரம் டெக் க்ரஞ் வலைத்தளத்திற்கு தெரிவித்துள்ளது.

PUBG கடந்த காலத்தில் ஏர்டெல், பேடிஎம் மற்றும் ஜியோவுடன் கேம் வெளியீட்டு உரிமைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவில் கேம் வெளியீட்டாளராக இருந்த டென்செண்டுடன் PUBG தனது உறவுகளை முறித்துக்கொண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில், பப்ஜி நிறுவனம் இந்திய பிளேயர்களுக்கான தனது சேவையகங்களை முழுவதுமாக மூடிவிட்டது, மேலும் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "பயனர் தரவைப் பாதுகாப்பது எப்போதுமே ஒரு முன்னுரிமையாக இருந்து வருகிறது, மேலும் இந்தியாவில் பொருந்தக்கூடிய தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் எப்போதும் இணங்குகிறோம்" என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக PUBG முழுவதுமாக மூடப்பட வேண்டியிருந்தது, இருப்பினும் APK பைல்களின் உதவியுடன் Android சாதனங்களில் இன்னமும் இந்த கேம் இயங்கக்கூடியதாக இருக்கிறது.

இந்தியர்கள் Call Of Duty Mobile மற்றும் Garena FreeFire போன்ற மாற்று கேம்களை வழிகளை அனுபவித்து வருவதால், PUBG மொபைலின் மீதான தடை இந்திய கேமர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக