சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் மானிட்டரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் மானிட்டர் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும், பயனர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை இந்த ஸ்மார்ட் மானிட்டரில் செய்து முடிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட் மானிட்டரின் சிறப்பம்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
புதிய ஸ்மார்ட் மானிட்டர்
இந்த புதிய ஸ்மார்ட் மானிட்டர் பிரத்தியேகமாக வொர்க் ஃப்ரம் ஹோம், ஹோம் லேர்னிங், எடிட்டிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தும் பயனர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டர் மொபைல் போன் கனெக்டிவிடி, பிசி மற்றும் லாப்டாப் கனெக்டிவிடி உடன் வருகிறது.
சிறந்த அனுபவம்
இது சாம்சங்கின் பில்ட்-இன் ஸ்மார்ட் டிவி தளத்தை ஒன்றியது, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் விஷுவல் டிஸ்பிளே பிஸினஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஹைசுங் ஹா கூறுகையில், சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட் மானிட்டரை வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் மற்றும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அவர்களின் தேவையை அறிந்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சிறந்த கனெக்டிவிட்டி அம்சம்
இந்த ஸ்மார்ட் மானிட்டர் பயனர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார். சிறந்த கனெக்டிவிட்டி அம்சத்திற்காக சாம்சங்கின் ஸ்மார்ட் மானிட்டர் பிசி, லாப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மொபைல் காஸ்டிங், ஆப்பிள் ஏர்பிளே மற்றும் சாம்சங் டெக்ஸ் (Samsung DeX) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
OTT செயலி அனுபவம்
இந்த புதிய ஸ்மார்ட் மானிட்டரில் வைஃபை இணைக்கப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் வைஃபை பயன்படுத்தி கிளவுட் பைல்கள், தகவல்களை மானிட்டரில் பார்க்கலாம். அதேபோல், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 போன்ற செயலிகளை ஸ்மார்ட் மானிட்டரில் பயன்படுத்தலாம். இத்துடன் HBO, Netflix, YouTube போன்ற OTT செயலிகளையும் நீங்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட் மானிட்டரில் பயன்படுத்தலாம்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக