இந்தியாவில் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 12 மாடல்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில ஐபோன் 12 மாடல்களில் டிஸ்பிளே, பேட்டரி போன்ற பலவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. பின்பு சில பயனர்கள் ட்விட்டர் வழியாக ஐபோன் 12 மாடல்களில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
ஐபோன் 12
மேலும் ஐபோன் 12 மாடல் ஆனது 6.1-இன்ச் Super Retina XDR டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு ஏ14 பயோனிக் சிப், டூயல் கேமரா, Non-removable Li-Ion 2851 எம்ஏஎச்பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் 12 மாடல். அதேபோல் எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன், 4கே வீடியோ பதிவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். அமேசான் வலைத்தளத்தில் 64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மாடலை ரூ.78,400-விலையில் வாங்க முடியும்.
இந்த ஐபோன் 12 மாடல்களுக்கு ஈடான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 12 மாடலுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஐபோன் 12 மாடல்களுக்கு ஈடான சிறந்த 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா
ஐபோன் 12 மாடலுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடல். அதன்படி 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 45வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம்.
மேலும் இந்த சாதனம் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 990எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7 பாதுகாப்பு வசதியைக் கொண்டும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10எம்பி செல்பீ கேமரா,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விலை ரூ.1,04,999-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ
ஐபோன் 12 மாடலை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல். ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. அமேசான் வலைத்தளத்தில் ரூ.54,999-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்
கூகுள் பிக்சல் 5
கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 சிப்செட் உடன் டைட்டன் எம் செக்யூரிட்டி சிப்பை கொண்டுள்ளது. மேலும் டூயல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ், 6 இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 4080 எம்ஏஎச் பேட்டரி,
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கைரேகை சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்களும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் ரூ.70,500-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
சியோமி மி 10டி ப்ரோ
ஐபோன் 12 மாடலை விட சிறப்பான கேமரா வசதி மற்றும் டிஸ்பிளே,சிப்செட் உள்ளிட்ட நன்மைகளுடன் வெளிவந்துள்ளது சியோமி மி 10டி ப்ரோ. குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது சியோமி மி 10டி ப்ரோ மாடல். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது சியோமி மி 10டி ப்ரோ மாடல்.
சியோமி மி 10டி ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.39,999-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 8டி
ஐபோன் 12 மாடலை போலவே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது ஒன்பிளஸ் 8டி மாடல். மேலும்ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது. மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 8டி.
ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் தளத்தில் ரூ.42,999-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக