IRCTCயின் புதிய வலைத்தளம் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கிறது. இதனால் முன்பை விட துரிதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்பதோடு, பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரயிலில் பயணிப்பவர்களுக்கு மிகப் பெரிய நல்ல செய்தி இது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது இனிமேல் எளிதாகிவிடும். IRCTCயின் வலைத்தளம் (Website) விரைவில் புதிய பொலிவுடன் செயல்படத் துவங்கவிருக்கிறது. IRCTCயின் புதிய வலைத்தளம் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கிறது. இதனால் முன்பை விட துரிதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்பதோடு, பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
IRCTCயின் புதிய வலைத்தளத்தை ரயில்வே அமைச்சர் 2020 டிசம்பர் 31 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி வைப்பார். IRCTCயின் இ-டிக்கெட் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டும் புத்தம் புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது பயணிகளுக்கு ஆன்லைனில் சுலபமாக டிக்கெட் முன்பதிவு செய்ய உதவும். புதிய வலைத்தளம் டிக்கெட் முன்பதிவை மிகவும் எளிதாக்குகிறது. பல மாற்றங்களுடன் முன்பதிவு மிகத் துரிதமாக நடைபெறும்.
IRCTCயின் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டும் மேம்படுத்தப்பட்ட பின்னர், பயணிகள் முன்பை விடவும், எந்த இடையூறும் இல்லாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் கூறுகிறது.
மேம்பட்ட வசதிகள் மற்றும் எளிய வடிவமைப்போடு IRCTC, e-ticket வலைத்தளத்தின் பயனர் தனிப்பயனாக்கம் மற்றும் வசதியை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருவதாக இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இனி வலைதளத்தில் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருகும். இதன் மூலம் ஐ.ஆர்.சி.டி.சியின் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் டிக்கெட் (E Ticketing service)
IRCTCயின் (IRCTC) புதிய வலைத்தளத்தில் நிமிடத்திற்கு 10,000 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும். இதற்கு முன்பு, ஒவ்வொரு நிமிடமும் 7500 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ரயில்வேயின் இ-டிக்கெட் வலைத்தளம் பயணிகளுக்கு அவர்களின் ரயில் பயணத்திற்கு (Travel) முழுமையான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரயில் டிக்கெட் வலைத்தளமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)) ஆன்லைன் முன்பதிவு வசதியை வழங்குகிறது.
2014 முதல் இயங்குகிறது IRCTC
2014 முதல், டிக்கெட் வசதிகளை மேம்படுத்துவதற்கும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக ரயில்வேத் துறை தெரிவிக்கிறது. IRCTC வலைத்தளம் ரயில்வேயில் பயணம் செய்பவர்களுக்கு முதல்தரமான அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதில் கடுமையாக உழைத்து வருகிறது
புதிய டிஜிட்டல் இந்தியா (Digital India)
புதிய டிஜிட்டல் இந்தியாவின் கீழ், ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்காக, டிக்கெட் கவுண்டர்களுக்குச் செல்வதற்குப் பதிலாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பெரும்பாலான மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) வலைத்தளம் தொடர்ந்து தன்னை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Cris உடன் இணைந்து செயலாற்றுகிறது IRCTC
ரயில்வே வாரியம், ஐ.ஆர்.சி.டி.சி, ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (Center for Railway Information Systems (Cris)) உடன் இணைந்து செயல்படுகிறது. வலைத்தளத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று IRCTC அதிகாரிகள் ரயில்வேத் துறை அமைச்சருக்கு உறுதியளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக