தூத்துக்குடி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் 3 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை அடுத்த கிளாக்குளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணலிங்கம் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி (18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு பிறகு இருவரும் திருப்பூரில் தங்கி அங்குள்ள நிறுவனத்தில் வேலை
பார்த்து வந்தனர். இந்த சூழலில் முத்துமணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்
முத்துமணி வேலை பார்க்கும் இடத்தில் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக
லட்சுமணலிங்கம் முத்துமணியை சந்தேகித்து சண்டையிட்டு வந்துள்ளார்.
மேலும், வரதட்சணை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால்
கோபித்துக்கொண்டு முத்துமணி கிளாக்குளத்தில் உள்ள தாய் வீட்டு வந்துவிட்டார். சில
நாட்கள் கழித்து அங்கு வந்த லட்சுமணலிங்கத்துக்கும், முத்துமணிக்கும் மீண்டும்
தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியையும், குழந்தையையும் லட்சுமணலிங்கம்
தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த 3 மாத குழந்தையை நெல்லை அரசு
மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது.
இதையடுத்து, லட்சுமணலிங்கம் மீது நடவடிக்கை எடுக்காமல் குழந்தையின் சடலத்தை வாங்க
மாட்டோம் என முத்துமணியின் உறவினர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த போலீசாரும், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியும் சேர்ந்து பேச்சு
வார்த்தையில் ஈடுபட்டனர்.
லட்சுமணலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பிறகு உறவினர்கள்
குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொண்டனர். அறியா வயதில் காதலித்து திருமணம்
செய்துகொண்டு தம்பதியால் 3 மாத குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம்
அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக