புனேயில் அமேசான் கிடங்கை சூறையாடியதற்காக 8 முதல் 10 மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) தொழிலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அமேசான் இணையதளத்தில் மராத்தி மொழி ஆதரவைச் சேர்ப்பது குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
மராத்தி மொழி ஆதரவைச் கட்டாயம் சேர்க்க வேண்டும்
அமேசான் இணையதளத்தில் மராத்தி மொழி ஆதரவைச் சேர்ப்பது தொடர்பான சர்ச்சை தொடர்பாக ஜனவரி 5 ம் தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டு ராஜ் தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் புனேவின் கோந்த்வா பகுதியில் உள்ள அமேசான் கிடங்கை எம்.என்.எஸ் தொழிலாளர்கள் சூறையாடியதாக்கத் தெரிகிறது. இப்பொழுது இந்த சம்பவம் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமேசானின் கிடங்கிற்கு நேர்ந்த அவலம்
மகாராஷ்டிராவில் ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டுமானால் அவர்கள் மராத்தி மொழியில் ஒரு விருப்பத்தை வழங்கக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று எம்.என்.எஸ் கங்கணம் கட்டி திரிகிறது. எதிர்காலத்திலும் வியாபாரிகள் இதைச் செய்யவில்லை என்றால், அமேசானின் கிடங்கிற்கு என்ன நேர்ந்ததோ இதே நிலைமை தான் அனைவருக்கும் நிகழ்ந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா நபர்கள்
இப்படி இவர்களுடன் ஒத்துழைக்காத நேரத்தில், மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா நபர்கள் தங்களின் கடைகளை வியாபாரம் செய்ய அனுமதிக்காது, வாகனங்கள் மகாராஷ்டிராவில் இயங்க அனுமதி வழங்காது என்று எம்.என்.எஸ் தொழிலாளி அமித் ஜக்தாப் கூறியுள்ளார். வியாழக்கிழமையான நேற்று, ராஜ் தாக்கரேவுக்கு அமேசான் அனுப்பிய நோட்டீஸ் சட்டவிரோதமானது. மகாராஷ்டிராவில் தொழில் செய்ய மராத்தி மொழி அவசியம் என்று கூறியுள்ளனர்.
ஜனவரி 5 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்
இ-காமர்ஸ் நிறுவனம் நகரில் உள்ள ஒரு டிண்டோஷி நீதிமன்றத்தை அணுகிய பின்னர், ஜனவரி 5 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மகாராஷ்டிரா வாடிக்கையாளர்களுக்காக தங்கள் இணையதளத்தில் மராத்தி மொழியை ஒரு விருப்பமாக சேர்க்குமாறு கேட்டு அமேசான் தலைவருக்கு எம்.என்.எஸ் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வழக்கு பதிவு
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147,149,427,452 பிரிவுகளின் கீழ் புனேவில் உள்ள கோந்த்வா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொழிக்காக இன்னும் மிரட்டல்களும், வியாபாரிகளின் கடைகள் சூறையாடப்படுவதும் இன்னும் இந்த பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வருகிறது. இம்முறை அமேசான் நிறுவனமும் இந்த சிக்கலில் சிக்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக