சியோமி நிறுவனம் வரவிருக்கும் Mi 11 ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வராது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன் வெய்போ வலைதளத்தின் வழி இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் சார்ஜரை போனுடன் வழங்காத நிறுவனமாக சியோமி மாறியுள்ளது.
போனுடன் சார்ஜ்ர் வழங்கப்படாது என்பது உண்மையா?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் போன்களுடன் சார்ஜ்ர் வழங்கப்படாது என்று அறிவித்து, ஸ்மார்ட்போன் சந்தையில் இது ஒரு புதிய போக்கை உருவாக்கியது. மற்ற உற்பத்தியாளர்கள் முதலில் இதை கேலி செய்தனர், இருப்பினும் இப்பொழுது நிறுவனங்கள் ஆப்பிள் செய்த அதே காரியத்தைப் பின்தொடர்வது போல் தெரிகிறது. சியோமியின் நடவடிக்கையும் இப்போது அப்படி தான் தெரிகிறது.
ஆப்பிளை பார்த்து அப்படி காப்பி அடித்த சியோமி..
சியோமி செய்துள்ள இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் கூட அப்படியே ஆப்பிள் போன்றதாக உள்ளது. இம்முயற்சி சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும் என்று சியோமி தெரிவித்துள்ளது. இந்த முடிவு நிறைய முதலில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தாது என்றாலும் கூட, வரும் காலங்களில் இதை அவர்களும் உணர்ந்து புரிந்துகொள்வார்கள் என்று லீ மேலும் கூறியுள்ளார்.
Mi 11 பாக்ஸ் சொல்லும் தகவல்
ஸ்மார்ட்போனின் பத்திரிகையாளர் சந்திப்பில் லீ ஜூன் இந்த தகவலைத் தொழில் நடைமுறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பற்றிய கருத்துக்களுக்கு மத்தியில் போட்டுடைத்துள்ளார். இந்த அறிவிப்புடன், Mi 11 ஷிப்பிங் செய்யப்படும் சார்ஜ்ர் இல்லாத பெட்டியின் புகைப்படத்தையும் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சாதனத்தின் சில முக்கிய விவரக்குறிப்புகள்
Mi 11 பாக்ஸ் பார்ப்பதற்கு மெல்லிதானதாகவும் மற்றும் சிறிய உருவத்திலும் உள்ளதைப் படம் உறுதிப்படுத்தியுள்ளது.
சார்ஜ்ர் இருப்பதற்கான வாய்ப்பு இதில் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதுடன், சாதனத்தின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் இது உறுதிப்படுத்தியுள்ளது.
108 எம்பி கேமரா
முதலாவதாக, இந்த புதிய Mi 11 சாதனம் எச்டிஆர் 10 + சான்றிதழ் உடன், 108 எம்பி கேமராவுடன் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று புகைப்படம் காண்பிக்கிறது. அதேபோல், இந்த சாதனத்திற்கான ஆடியோ ட்யூனிங்கை ஹர்மன் கார்டன் செய்துள்ளதும் தெரிகிறது.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக