வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கடல் போல் கருணையுள்ளம் கொண்ட கன்னி ராசி நேயர்களே..!!
இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இதற்குமேல் உங்களின் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு செல்கிறார்.
சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சப்தம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தவர்களுக்கு சீரடையும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழலும், மாற்றமும் உண்டாகும். உடைமைகளை கொடுப்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலம் உத்தியோகத்தில் பதவி உயர்வு அடைவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நன்று. திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளால் பணிகளில் காலதாமதம் நேரிடலாம்.
பெண்களுக்கு :
உறவுமுறையில் திருமண வாய்ப்புகள் அமையும். விரும்பிய இடத்தில் விரும்பிய வண்ணம் திருமண யோகம் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானப்போக்கை கடைபிடிப்பது அவசியம். புத்திரப்பாக்கியம் கைகூடும். இடுப்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கும்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி பயில்பவர்கள் தங்களது கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மையை குறைத்து பாடத்தில் கவனம் செலுத்தவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வகுப்பில் முதல் மதிப்பெண்களை பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தங்களை விட வயதில் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடப்பது நன்மையை தரும். பிறருக்கு பொருளாதாரம் சார்ந்த ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலம் பலவிதமான நன்மைகளை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பெரிய தலைவர்களின் சந்திப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் வராமல் பார்த்து கொள்வது சிறப்பு. சேமிப்பின் ஒரு பகுதியை தங்கள் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு :
பண்ணை சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களுக்கு தொழில்வளம் சிறப்பை தரும். நீர்ப்பாசன நிலை அமோகமாக இருக்கும்.
கலைஞர்களுக்கு :
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கான அங்கீகாரம் காலதாமதமாகும். புதிய கலை சார்ந்த நுணுக்கம் மற்றும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வழிபாடு :
திருப்பைஞ்ஞிலி சென்று எமதர்மனுக்கு வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மேம்படும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக