--------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
----------------------------------------
கணக்கு வாத்தியார் : உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுத்தால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்?
பையன் : ஆயிரம் ரூபாய் சார்.
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலையா?
பையன் : சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல.
கணக்கு வாத்தியார் : 😳😳
----------------------------------------
மனைவி : (சலிப்புடன்) மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மேக்கப் போட்டது வீணா போச்சு..
கணவன் : ஏன் என்ன ஆச்சு?
மனைவி : பரிசு கிடைக்கல.
கணவன் : என்ன வேசம் போட்ட?
மனைவி : பத்ரகாளி வேசம்.
கணவன் : மேக்கப் போடாம போயிருந்தா பரிசு கிடைச்சிருக்கும்...
மனைவி : 😠😠
----------------------------------------
குட்டிக்கதை...!!
----------------------------------------
இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருவனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி பணக்காரப் பெண், சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறது-ன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான். நண்பன் சொன்னான்... ஏழையா இருக்கிற பெண்ணை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்க்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே. அவனும் சரி என்றான்.
நண்பன் போகும் போது சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள்? அவள் முகவரி சொல்லு...😎😎
----------------------------------------
கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு
விளக்கம் :
இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது. கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக