இனிமையாக பேசி அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!!
உறவுகள் பற்றிய புரிதலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். அண்டை அயலாரிடம் உரையாடும்போது தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அமைதி போக்கினை கையாளுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும்.
ஆரோக்கியம் :
ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சூடு சம்பந்தமான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். தலைசுற்றல், நரம்பு இழுத்து பிடித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
திருமணம் :
திருமணம் தொடர்பான முயற்சிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நன்மையளிக்கும்.
மாணவர்கள் :
அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடும், அவ்வப்போது ஞாபக மறதியும் ஏற்பட்டு மறையும். ஆகவே, ஒன்றுக்கு இரண்டு முறை படித்து எழுதி பார்ப்பது நன்மையளிக்கும்.
வியாபாரிகள் :
பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பொருட்களை விற்று லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் :
தொண்டர்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பொதுக்கூட்டம் தொடர்பான செயல்பாடுகளில் வாக்குவாதம் மற்றும் பலதரப்பட்ட தொடர்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். விபரீத ஆசைகளையும், ஈர்ப்பையும் குறைத்துக்கொள்வது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும்.
கலைஞர்கள் :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், பொருட்சேர்க்கையும், செல்வச்செழிப்பும் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
நன்மை :
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடனும், எண்ணத் தெளிவுடனும், எதிர்பார்த்த உதவிகள் மூலம் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புடனும், முன்னேற்றத்தை உருவாக்கி கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி முன்னேற்றத்தை அடைய நித்ரா குழுமத்தின் நல்வாழ்த்துக்கள்.
கவனம் :
மனதிற்கு நெருக்கமானவர்களிடத்திலும், பேச்சுக்களிலும், மக்கள் தொடர்பான பணிகளிலும் இருப்பவர்கள் பொறுமையை கையாளவும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதிகளில் நாகதேவர்களை வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களினால் வழிபாடு செய்து வர எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக