👉 துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் தன் வீட்டில் ஆட்சி பலம் பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு
👉 வாழ்க்கையில் உள்ள இன்பங்களை அனுபவித்து, ரசித்து வாழக்கூடியவர்கள்
👉 அனைவரையும் வசீகரிக்கும் மற்றும் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்
👉 உடல் உழைப்பு அல்லாத கட்டளை மட்டும் இடும் பணிகளை விரும்பி செய்யக்கூடியவர்கள்
👉 எதிலும் சுகமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் இலக்காகும்
👉 செய்யும் பணிகளிலும், செயல்களிலும் விருப்பமின்றி அலட்சியமாக செயல்படும் குணம் உடையவர்கள்.
👉 தன செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள். செய்யும் செயல்களில் ஆதாயம் வேண்டுபவர்கள்.
👉 சுயநல எண்ணங்களுடன் கலந்த பெருந்தன்மையான குணம் கொண்டவர்கள்.
👉 தன்னுடைய தேவைகளுக்கும், குடும்ப தேவைகளுக்கும் தாராளமாக செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.
👉 இறைவழிபாடு மற்றும் பூஜைகள் சம்பந்தமான பணிகளில் சுயநலமின்றி பொதுநலத்தோடு செயல்படுவார்கள்.
👉 மற்றவர்களை கெடுத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். ஆனால், சிறிது பொறாமை குணம் உடையவர்கள்.
👉 நித்திய தூக்கம் உடையவர்கள். தூக்கத்தில் இவர்களே மன்னர்கள் ஆவார்கள்.
👉 சிலருக்கு கண் சம்பந்தமான கோளாறுகள் அவ்வப்போது தோன்றி மறையும். சிலர் கண்ணாடி அணிய நேரிடலாம்.
👉 இசைத்துறையில் விருப்பம் கொண்டவர்கள். சிறிது அதைப் பற்றிய ஞானமும் உடையவர்கள்.
👉 எவரும் அறியா வண்ணம் சில ரகசிய நடவடிக்கைகளை உடையவர்கள்.
👉 இருவகையான தோற்றங்களை உடையவர்கள். அதாவது உள் மனதில் நீங்காத கவலைகளும், தேவையற்ற வீண் பயங்களும் உடையவர்கள். ஆனால், வெளியில் எதற்கும் கவலைப்படாதவர்கள் போல் தோற்றம் அளிக்கக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக