Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 டிசம்பர், 2020

விவசாயிகளின் போராட்டம்: கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கத்தை முடக்கிய பேஸ்புக்.! பின்பு நடந்தது என்ன?

பக்கமான கிசான் ஏ

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பல்வேறு விவசாய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் தீர்க்கமாக உள்ளனர். ஆனால், இதை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை.

அதற்கு பதிலாக வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை மட்டும் கொண்டு வர மத்திய அரசு முன்வந்தது. இது தொடர்பான வரைவு அறிக்கை விவசாய சங்க நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த விவசாயிகள், மத்திய அரசின் திருத்தங்களை ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் பேஸ்புக் பக்கமான கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தையும் இன்ஸடாகிராம் பக்கத்தையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கியது. டெல்லியின் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான தகவல்களை அதிகம் பதிவிட்டு நேரலையாக ஒளிபரப்பியதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டது என்று கூறப்படுகிறது. ஆனால் பல நேரம் கழித்து மீண்டும் பேஸ்புக் பக்கம் செயல்படத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மத்திய அரசு அறிவித்துள்ள இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

மேலும் இந்த போராட்டம் 26-வது நாட்களை எட்டி இருக்கிறது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பின்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கத்தை நிறுவனம் நீக்கி இருக்கிறது. இந்த பக்கத்தின் வழியாக போரட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது. திடீரென இந்த பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கியது.

குறிப்பாக இந்த பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதேபோன்று இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்று வரும் நாள்முதல் பல தகவல்களை உடனுக்குடன் இந்த பேஸ்புக் பக்கத்தில் விவசாயிகள் பதிவிட்டு வருகின்றனர்.


இந்த போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்தார். அதில் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என்றும், இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர் என்றும் கூறி இருந்தார். அதன்பிறகு தான் விவசாயிகள் சங்கத்தின் பேஸ்புக் பக்கமும் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது.

ஆனால் சில மணிநேரம் முடக்கப்பட்டிருந்த விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்படத்துவங்கின. பின்பு விவசாயிகளின் பேஸ்புக் பக்கமும், இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்புகளை எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக