Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இனிமேல் வைப்புத்தொகை கட்டாயம்: ஜியோவின் கெடுபிடி அறிவிப்பால் பயனர்கள் அதிருப்தி!

 பிரதானமாக மாறும் இணைய தேவை

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல் உள்ளிட்டவைகள் ஆகும். அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் சலுகைகளை அறிவித்து வருகிறது.

பிரதானமாக மாறும் இணைய தேவை

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு பிரதான தேவையாக இருக்கும் இணைய தேவைகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக கொரோனா பரவல்முதல் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்புகள், இணையவழி கருத்தரங்கம் என பல்வேறு தேவைக்கு இணைய சேவை பிரதானமாக உள்ளது.

பல்வேறு சலுகைகளோடு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரூ.399 முதல் ரூ.1,499 வரையிலான விலைகளில் வழங்கி வருகிறது. அதேபோல் ரூ.199 என்ற விலையில் கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஓடிடி அணுகல் கிடைக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஓடிடி அணுகலோடு திட்டங்கள்

ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1,499 விலையில் கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களானது டேட்டா ரோல் ஓவர், இலவச அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளோடு கிடைக்கின்றன. அதோடு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபிக்கான சந்தா அணுகல், நெட்ஃபிலிக்ஸ் சந்தா அணுகல் உள்ளிட்ட பல ஓடிடி அணுகல் கிடைக்கின்றன.

ரூ.1,800 பாதுகாப்பு வைப்புத் தொகை

பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களை மிக மலிவு விலையில் வழங்கி வருகிறது. இருப்பினும் பயனர்கள் ரூ.1,499 திட்டம் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.1,800 பாதுகாப்பு வைப்புத் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு வைப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டிய செலுத்த வேண்டும். பயனர்கள் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை திரும்பச் செலுத்திய பின்னர் வைப்புத் தொகையை திரும்பத் தரப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

6 மாதத்திற்கு இதே திட்டம்

இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு இந்த திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வாடிக்கையாளர் வெளியேறும்பட்சத்தில் ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்கள் ரூ.1499 மற்றும் வரி செலுத்த வேண்டும்.

விவரங்கள் சரிபார்த்த பிறகே வைப்புத் தொகை தரப்படும்

மேலும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் வாடிக்கையாளர்களின் போஸ்ட்பெய்ட் திட்ட வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்த பிறகே பாதுகாப்பு வைப்புத் தொகை திரும்ப செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக