சன்ரூஃப் உடன் 2021 ரெனால்ட் கிகர் கார்களின் சோதனை மாதிரிகளின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.
காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் இராஜ்ஜியமாக தற்சமயம் இந்திய சந்தை உள்ளது. இதனால் பெரும்பாலும் புதிய அறிமுகங்களாக எஸ்யூவி கார்களையே கொண்டுவர அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டுவர, அந்த வகையில் நிஸான் நிறுவனம் சமீபத்தில் மேக்னைட் காம்பெக்ட்-எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது.
அதனை தொடர்ந்து நிஸானின் கூட்டணி நிறுவனமான ரெனால்ட்டில் இருந்து காம்பெக்ட் எஸ்யூவி ரக மாடலாக கிகர் வெளிவரவுள்ளது. இந்த கூட்டணியின் மாடுலர் சிஎம்எஃப்-ஏ ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி கிகர் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்திதான் மேக்னைட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ரெனால்ட் கிகரின் ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக வெளிவந்துள்ளன.
இந்த சோதனையில் மொத்தம் மூன்று கிகர் மாதிரிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டில் சன்ரூஃப் இல்லை, ஆனால் ஒன்றில் சன்ரூஃப் இருப்பதற்கான அடையாளம் மறைப்பை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது.
இது எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப்-ஆக இருக்கலாம். இந்த எலக்ட்ரிக் சன்ரூஃப் கிகரின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள மற்ற சில காம்பெக்ட்-எஸ்யூவி கார்களும் சன்ரூஃப்-ஐ பெறுகின்றன.
இதில் கியா சொனெட், வென்யூ, நெக்ஸான், எக்ஸ்யூவி300 மற்றும் ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன. சன்ரூஃப் மட்டுமில்லாமல் வேறு சில தொழிற்நுட்ப அம்சங்களிலும் கிகர், நிஸான் மேக்னைட்டை காட்டிலும் அப்கிரேட்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கண்ட்ரோல்களுடன் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்றவற்றை ட்ரைபரில் இருந்து பெற்றுவரலாம்.
அதேபோல் கிகரின் விலை குறைவான வேரியண்ட்களுக்கு அதிகப்பட்சமாக 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய ரெனால்ட் ட்ரைபரின் பிஎஸ்6 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். டாப் வேரியண்ட்கள் கிட்டத்தட்ட 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறலாம்.
இவற்றில் 1.0 லிட்ட்ர் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு சிவிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. ரெனால்ட் கிகரின் ஆரம்ப விலை ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக