லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி நடித்த 2020ல் பெரும் எதிர்பார்க்கப்பட்ட படமான மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் கதை லீக் ஆனது.
லோகேஷ் கனகராஜ் மூன்றாவது படமான மாஸ்டர் இல் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். பாடல்கள் போஸ்டர்கள் என்ன வெளிவந்த நிலையில் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் ஆக்சன் திரில்லர் படம் எனவும் அதன் நீளம் மூன்று மணி நேரம் எனவும் கூறப்படுகிறது.
போதைக்கு அடிமையானதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வாத்தியாராக மூன்று மாத பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார் விஜய். சீர்திருத்த பள்ளியை நடத்தி வரும் விஜய் சேதுபதி முதலில் மாணவர்களை தவறான விஷயங்களுக்காக பயன்படுத்துகிறார். அதனால் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் ஏற்படும் மோதலே திரைப்படத்தின் கதை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக