Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 24 டிசம்பர், 2020

நாக்பூர் நபர் மூலம் இந்தியாவில் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா வைரஸ்?

நாக்பூர் நபர் மூலம் இந்தியாவில் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா வைரஸ்?

டிசம்பர் 15 ஆம் தேதி நாக்பூரில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 28 வயதான ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவிக்கொண்டிருக்கும் தொற்றின் புதிய மாறுபாடு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதை நாக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நவம்பர் 29 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து திரும்பிய அந்த நபர், விமான நிலையத்தில் இறங்கியவுடன் பரிசோதிக்கப்பட்டார். ஆனால் அப்போது அவருக்கு COVID-19 தொற்று இல்லை என்றே சோதனை முடிவுகள் தெரிவித்தன என அரசு மருத்துவக் கல்லூரி நாக்பூரின் கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் கவாண்டே தெரிவித்துள்ளார்.

"ஏழு நாட்களுக்குப் பிறகு அவருக்கு அறிகுறிகள் தோன்றியதாகவும் வாசனை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் புகார் செய்தார். நந்தன்வன் பொது சுகாதார கிளினிக்கில் (பி.எச்.சி) அவர் மீண்டும் COVID-19 க்கு பரிசோதிக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு தொற்று இல்லை என்றே முடிவுகள் வந்தன. டிசம்பர் 15 அன்று அவரது விரைவான ஆன்டிஜென் சோதனை முடிவுகள் வந்தன" என்று டாக்டர் கவாண்டே கூறினார்.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

"மகாராஷ்டிராவில் (Maharashtra) உள்ள கோண்டியாவுக்கு அக்குடும்பம் சென்றுள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதி, அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் சோதனைக்காக அவரது இரண்டு மாதிரிகளை சேகரித்தோம். ஒரு மாதிரி RT-PCR சோதனைக்காகவும் மற்ற மாதிரி பிற சோதனைகளுக்காக புனேவுக்கும் அனுப்பப்பட்டன” என்று மருத்துவர் மேலும் கூறினார்.

எனினும், இறுதி சோதனை அறிக்கைகள் வரும் வரை நோயாளிக்கு கொரோனா வைரசின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று நாக்பூர் நகராட்சி ஆணையர் கூறினார்.

"இங்கிலாந்துக்கான (England) பயண வரலாற்றைக் கொண்ட, 28 வயதான அந்த நபர், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகள் இப்போது மேலதிக விசாரணைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து முடிவுகள் வந்தவுடன்தான் அவருக்கு இருப்பது பழைய கொரோனா வைரஸ் தொற்றா அல்லது புதிய மாறுபாடா என்பது தெரியவரும்” என்று நாக்பூர் நகராட்சி ஆணையர் பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதற்கிடையில், 2020 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அனைத்து விமான போக்குவரத்தையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

COVID-19 வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) டிசம்பர் 20 அன்று பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தார். "வைரஸின் இந்த புதிய மாறுபாடு மற்றும் அது ஏற்படுத்தும் ஆபத்து குறித்து எங்களிடம் உள்ள ஆரம்பகட்ட சான்றுகளின் படி, நாம் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்ளில் ஈடுபட முடியாது என கனமான இதயத்தோடு உங்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக